பக்கம்:பாவேந்தர் நினைவுகள்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர் கினைவுகள்/84 ருந்தன. அவற்றுள், கண்ணுடியைப் பார்த்து ஒரு பெண் நெற்றியில் பொட்டு வைத்துக் கொள்வது போல ஒரு சிற்பம் இருந்தது. அச்சிற்பத்தின் கலையழகு என் உள்ளத்தைக் கொள்ளை கொண்டது. அதையே பார்த்துக் கொண்டிருந்தேன். எவ்வளவு நேரம் நான் அப்படியே நின்று கொண்டிருந்தேனே தெரியாது. என்ைேடு வந்த நண்பர்கள் கடைகளையெல்லாம் ஒரு முறை சுற்றிப் பார்த்துவிட்டு மீண்டும் அதே இடத்துக்கு வந்தனர். நான் அந்தச் சிற்பக் கடையிலேயே நிற்பதைப் பார்த்து விட்டு என்னைக் கூட்டிச் சென்றனர். 'இரத்தக் கண்ணிர் 'பராசக்தி முதலிய சர்ச்சைக்குரிய படங்களை எடுத்த நேஷனல் பிக்சர்ஸ் உரிமையாளரான திரு. பெருமாள் வீட்டில் நான் அப்போது தங்கியிருந் தேன். வீடு திரும்பிய பிறகும் அச்சிற்பத்தின் கலையழ கைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தேன். அதைக் கவனித்த பெருமாள் செட்டியார் ஓர் ஆளைத் தேனும் பேட்டைப் பொருட்காட்சிக்கு அனுப்பி அச்சிலையை விலை கேட்டு வரச்சொன்னர். ஆனுல் அச்சிலையைக் கடைக் காரன் விலைக்குக் கொடுக்க மறுத்துவிட்டான்.' O