பக்கம்:பாவேந்தர் நினைவுகள்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர் நினைவுகள்/90 களிடம் இசையோடு பாடிக் காட்டிக் கொண்டிருந்தேன். அவர்கள் மெய்மறந்து கேட்டுக்கொண்டிருந்தார்கள். அப் பாடல் முழுதும் இப்போது எனக்கு நினைவில் இல்லை. நினைவில் உள்ள சில வரிகளை மட்டும் பாடுகிறேன். (கவிஞர் பாடினர்) நீலமலர் தன்னையும் கோலக்கெண்டை மீனையும் கிகர்க்குதேஇவள் கேத்ரம் என்ன காத்ரம்? நான்எம் மாத்ரம்? - இந்த வாலைப்பெண்ணைப் புணர வேண்டுமே கொக்கோக சாத்ரம். ஏக காலத்திலிரு சூரியன் புறப்பட்டா எப்படித் தானிருக்கும் ஒது? அதுபோல் காதில் இருப்பதேது? ஒப்பாலாயிரம் பெறும் கொப்பு முதல் ககைகள் இழையாலாயிரம் பெறும் தாவணி மற்றும் பூவணி - கனக சுப்பு ரத்னம் சொன்னன் அடியா லாயிரம்பெறும் லாவணி. இந்தப் பாட்டில் ஈடுபட்டு நான் பாடிக்கொண்டிருந்த போது பாரதியார் மாடிப்படியேறி வந்தது எங்களுக்குத் தெரியாது. வந்தவர் லாவணி முடியும் வரையில் மாடிப் படியிலேயே நின்று கேட்டுக் கொண்டிருந்தார். பாட்டு முடிந்ததும் சபாஷ் என்று கூறிக்கொண்டு மேலே வந் தார். என்னை முதுகிலே தட்டிக்கொடுத்து, "சுப்புரத்தனம் உன்பாட்டிலே நிறைய விஷயம் இருக்குது' என்று கூறிப்