பக்கம்:பாவேந்தர் படைப்பில் அங்கதம்.pdf/148

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


இ- முருகு சந்தரம் -இ கவிதைக்காக எதையும் இழக்கத் தயங்காதவர். குடும்பப் பொறுப்புகளைக் கூடக் கவிதைப் பணிக்கேற்பக் கச்சிதப்படுத்திக் கொண்டவர். சட்டப் பேரவைத் தேர்தலில் நிற்கும்படி கலைஞர் அழைத்தபோதுகூடக் கவிதைப் பணி கெடக்கூடாது என்பதற்காக அதை மறுத்துவிட்டவர். அவர் தேர்தலில் நின்று வெற்றி பெற்றிருந்தால் அமைச்சராகவும் ஆகியிருப்பார். தம் கவிதைப் பணிக்கு இடையூறாகப் பேராசிரியர் பதவி இருந்த காரணத்தால் அதையும் தூக்கி எறிந்தார். அவர் பெற்ற பட்டங்களும், விருதுகளும், பரிசுகளும் தாமே விரும்பி அவரைத் தேடி வந்தவை. அவர் எதையும் தேடிப் போவதில்லை, வெண்சுருட்டைத் தவிர! தாம் ஒரு கவிஞர்' என்ற பெருமிதம் அப்துல் ரகுமானுக்கு அதிகம். அதனால் தான் அவரை யாரும் விலைக்கு வாங்க முடியவில்லை. சில அரசியல் கட்சித் தலைவர்கள் அவரை விலைபேசிப் பார்த்தனர். அவர் மசியவில்லை. அம்மி கொத்தும் வேலை என்று பணம் கொழிக்கும் திரைப்படத் துறையை ஒதுக்கிய அவருடைய ‘சிற்பத்தனம் பெருமிதத்தின் விளைவே. கவிதா தேவிக்கு இந்த நூற்றாண்டில் பல கவிஞர்கள் தங்கக் கிரீடங்களைச் சூட்டியிருக்கின்றனர். ரகுமான் அவள் நெற்றியில் கோஹினூர் வைரத்தைப் பதித்திருக்கிறார். அதனால்தான் அவர் கவிக்கோ!