பக்கம்:பாவேந்தர் படைப்பில் அங்கதம்.pdf/150

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


முருகு கத்தரம் -இ சென்னை குயப்பேட்டை நகராட்சிப் பள்ளியில் எட்டாம் வகுப்புவரை படித்த கம்பதாசன், இளமையில் நாடக நடிகராக வாழ்க்கைய்ைத் தொடங்கிச் சிறிது காலம் மண்ணுருக் கலைஞராகவும் (Moulder) ஜெமினி போன்ற படப்பிடிப்பு நிலையங்களில் பணி செய்திருக்கிறர். இது இவர் குலத்தொழில் இவருக்கு ஒவியம், நாட்டியம் போன்ற கலைகளில் பயிற்சி உண்டு. இனிமையாகப் பாடுவார். கம்பதாசன் முதன்முதலில் நடித்தபடம் திரெளபதி வஸ்திராபரணம்; முதன்முதலில் பாடல் எழுதிய படம் “சீனிவாச கல்யாணம்.” பாவேந்தர் பாரதிதாசன், உருதுக் கவிஞர் இக்பால், வங்கக் கவிஞர் ஹரீந்திரநாத், ச. து. சு. யோகி, சிறுகதைச் சிற்பி கு. ப. ரா, நாரண துரைக்கண்ணன் - இவர் பழகிய இலக்கிய வட்டம். ஜெயப்பிரகாஷ் நாராயணன், லோகியா, அசோக் மேத்தா ஆகியோர் இவர் பழகிய அரசியல் வட்டம். இவர்கள் கம்பதாசனைக் 'கவி கவி' என்று அழைத்து ஆர்வத்தோடு அன்பைச் சொரிந்தனர். கம்பதாசன் தம்மை ஒரு சோஷலிஸ்ட் என்று கூறிக்கொண்டார். ஜே. பி. யின் கூட்டங்களில் தாம் எழுதிய பாடல்களை இவரே பாடுவார். இரங்கூனில் நடைபெற்ற சோஷலிஸ்ட் மாநாட்டிலும் இவர் கலந்துகொண்டார். 1946இல் சென்னையில் நடைபெற்ற எழுத்தாளர் மாநாட்டில் காந்தியடிகள் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டார். அம்மாநாட்டின் பிரார்த்தனைப் பாடலைத் தாமே எழுதி இனிய குரலில் பாடிக் காந்தியடிகளின் பாராட்டைப் பெற்றார் கம்பதாசன். திரைப்படப் பாடல்களுக்கு முதன் முதலில் பெருந்தொகை வாங்கிய முதல் கவிஞர் கம்பதாசன் தான். கண்ணதாசன் திரைப்படத்துறையில் நுழைந்தபோது, "நான் கம்பதாசனைப் போல் புகழ்பெற வேண்டும்; அது