பக்கம்:பாவேந்தர் படைப்பில் அங்கதம்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர் படைப்பில் அங்கதம் 455 நானும், கம்பதாசனும், திரைக்கதை எழுத்தாளர் இளங்கோவனும் அடக்கம்” என்று சுரதா குறிப்பிட்டுள்ளார். பாரதியின் பிண ஊர்வலத்தில் ஆறுபேர் கலந்து கொண்டனர். கம்பதாசன் இறந்தபோது அவர் பிணத்தை ஒரு குதிரை வண்டியில் ஏற்றிக் கொண்டு அவருடைய உறவினர்கள் மூவர் மட்டுமே சென்றனர்; நண்பர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை. பாரதி புதைக்கப்பட்ட கிருஷ்ணாம் பேட்டைச் சுடுகாட்டில் தான் இவரும் புதைக்கப்பட்டார். கம்பதாசன் ஒரு பிறவிக் கவிஞர்; கலைஞர். முறையான இலக்கண இலக்கிய அடிப்படை அவருக்கு இல்லை என்பது அவர் கவிதையில் பல இடங்களில் தென்பட்டாலும், உணர்ச்சி மிக்க கவிதை ஆவேசமும், கருத்துப் புதுமையும் நிறைந்திருப்பதைக் காணலாம். “கவிஞர் என்றே அழைக்கத் தகுதி போதாத பல சாதாரண மனிதர்களைச் சாதிப்பற்று காரணமாகவும், அரசியல் சார்பு காரணமாகவும் போற்றிப் புகழ்ந்து, அவர்களுக்கு வாழ்க்கை வசதிகளைச் செய்து கொடுக்கப் பலர் இருந்தார்கள்; இப்போதும் பலர் இருக்கிறார்கள். ஆனால் இலக்கியத்தில் சாதனைகள் புரிந்த பெருங்கவி கம்பதாசனுக்குத்தான் யாருமே இல்லாது போய்விட்டார்கள். இது எவ்வளவு பெரிய கொடுமை!’ என்று குறைபட்டுக் கொள்கிறார் கம்பதாசனின் இலக்கியச் சுவைஞரான சோமசுந்தரம் என்பவர். கவிஞர் கம்பதாசன், திரைவானிலும், இலக்கிய வானிலும் திடீரென்று தோன்றிக் குறுகிய காலத்தில் தன்னைத்தானே எரித்துக் கொண்டு அணைந்து போன எரிநட்சத்திரம். &