பக்கம்:பாவேந்தர் படைப்பில் அங்கதம்.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- பாவேந்தர் படைப்பில் அங்கதம்-இ 'மூலப்பிரதி' என்று தலைப்பிட்ட தம் பாடலை, அவர் பல கவியரங்குகளில் பாடக் கேட்டிருக்கிறேன் அவருக்கு மிகவும் பிடித்த பாடல் அது முன்பொரு பாடல் எழுதினேன் - அந்த மூலப் பிரதி கைவச மில்லை (முன்பொரு/ எழுதிய பாடல் ஒன்றினை வீட்டின் எரவா ணத்தில் செருகி யிருந்தேன்; பழுது வந்தது; பார்த் திருந்தவர் பாடலை எடுத்துப் பதுக்கிக் கொண்டார். (முன்பொரு) இன்ப மென்றொரு தலைப்பிட் டந்த இனிய பாடலை எழுதிய நினைவு; துன்பம் வந்து சூழும் போது துணைசெயக் கூடும் தொலைந்துபோ யிற்று (முன்பொரு) வாய்மை என்றொரு வாசகம் வைத்து வண்ணப் பாடலை எழுதிய துண்டு; பொய்மை இருளில் பொன்விளக் காகும், பொக்கென மறைந்து போயிற் றென்செய? (முன்பொரு) வெற்றி என்ற விளக்கம் தந்தொரு வீரியச் சொல்லை விளம்பிய துண்மை; முற்றும் தோற்று விட்டபோ தெனக்கு மூளும் நற்றுணை, முழுதும் காணோம்! (முன்பொரு) இருந்த இடத்தில் இருந்த படிஅவ் வின்னிசை கேட்டே இருந்தேன் இங்கு வரும்போ தெனக்கு வழித்துணை யாக வந்தது, இடையில் வழிப்பறி போக! (முன்பொரு/