பக்கம்:பாவேந்தர் படைப்பில் அங்கதம்.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- பாவேந்தர் படைப்பில் அங்கதம் 一团 யூனியனோடோ, பாக்கிஸ்தானோடோ தங்கள் ஆட்சிக்கு உட்பட்ட நிலபரப்பை ஐக்கியப்படுத்திக் கொண்டனர். அப்போது காஷ்மீரை ஆண்ட ஹரிசிங் (டாக்டர் கரண்சிங்கின் தந்தை) 1947 ஆம் ஆண்டு அக்டோபர் 26 ஆம் நாள் தம் ஆட்சிக்குட்பட்டிருந்த நிலப்பரப்பை இந்திய யூனியனோடு சேர்த்துக் கொள்ள விருப்பம் தெரிவித்து அது தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். அப்போது காஷ்மீர்ப் பள்ளத்தாக்கில் சில இடங்களில் கலவரம் ஏற்பட்டது. அதை ஒரு காரணமாக வைத்து அப்போது கவர்னர் ஜெனராக இருந்த மவுண்ட் பேட்டின் பிரபு, காஷ்மீர் மக்களின் விருப்பத்தை வாக்கெடுப்பின் மூலம் அறிந்த பிறகே காஷ்மீரை இந்திய யூனியனோடு சேர்ப்பது பற்றி முடிவு செய்யலாம்’ என்று காஷ்மீர் அரசர் ஹரிசிங்கிற்கு ஒரு கடிதம் எழுதினார். அப்போது இந்தியப் பிரதமராக இருந்த நேரு காஷ்மீரில் உருவான புயலையோ, மவுண்ட் பேட்டன் கடிதத்தைப் பற்றியோ கண்டு கொள்ளவில்லை. மற்ற அரசர்கள் எல்லாரும் தங்கள் விருப்பம்போல் இந்திய யூனியனோடோ, பாக்கிஸ்தானோடோ சேரலாம் என்று அனுமதி அளிக்கப்பட காஷ்மீர் அரசுக்கு மட்டும் இப்புதிய நிபந்தனை எதற்காக என்று நேரு கேள்வி எழுப்பியிருக்க வேண்டும். அவர் அப்போது ஏனோ மெளனமாக இருந்துவிட்டார். காஷ்மீர் விவகாரத்தை நாமே அப்போது எளிதாகத் தீர்த்துக் கொண்டிருக்க முடியும். கிளர்ச்சி செய்த நிசாம் அரசை இந்திய யூனியனுக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுத்த படேலின் இரும்புக்கரம் காஷ்மீரிலும் அதே நடவடிக்கையை மேற்கொண்டது. காஷ்மீரின் மூன்று மாவட்டங்களை இந்தியப்படை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிட்டது. இன்னும் இரண்டு மாவட்டங்களே இருந்தன. அதையும் இன்னும் ஒரு