பக்கம்:பாவேந்தர் படைப்பில் அங்கதம்.pdf/180

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


முருகு சந்தரம் -இ வாரத்தில் இந்தியப்படை கைப் பற்றித் தன் கட்டுப்பாட்டில் கொண்டுவந்திருக்க முடியும். இந்தச் சூழ்நிலையில் நேரு, காஷ்மீர்ப் பிரச்சன்ையைத் தேவையில்லாமல் ஐக்கிய நாடுகள் சபைக்கு எடுத்துச் சென்றார். அதுவே இன்றுவரை நமக்குத் தீராத தலைவலியாக மாறிவிட்டது. 1948 ஆகஸ்டு 13 ஆம் நாள் ஐக்கிய நாடுகள் மன்றப் பாதுகாப்புச் சபை ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. அதனபடி இரு நாடுகளும் போர் நிறுத்தம் செய்ய வேண்டும். தான் கைப்பற்றிய காஷ்மீர்ப் பகுதியை விட்டு பாகிஸ்தான் வெளியேற வேண்டும், மக்களின் கருத்தையறியக் காஷ்மீரில் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பதே அத்தீர்மானத்தின் சரத்துக்கள் பாகிஸ்தான் அத்தீர்மானத்துக்கு மதிப்பளித்துத், தான் கைப்பற்றிய பகுதியை விட்டு வெளியேறவில்லை. அதனால் காஷ்மீர் மக்களின் பொதுக்கருத்தை அறிய மக்கள் வாக்கெடுப்பை நடத்த வேண்டிய தேவையும் ஏற்படவில்லை. மேலே குறிப்பிட்ட இரண்டு தவறுகளால் காஷ்மீர்ச் சிக்கலை உருவாக்கியவரே பண்டித நேருதான். காஷ்மீர்ப் பிரச்சனையைச் சர்வதேச அளவில் பாகிஸ்தான் எடுத்துச் செல்வதற்கும் நேருவே வழிகாட்டி காஷ்மீர்ச் சிக்கலை உருவாக்கிய நேரு, தில்லியில் இருந்து கொண்டே காஷ்மீரில் ஒரு பொம்மை அரசை நிறுவி இயக்கத் தொடங்கினார். காஷ்மீரில் நடைபெற்ற முதல் சட்டசபைத் தேர்தல் பெரிய கேலிக் கூத்தாக முடிந்தது. ஷேக் அப்துல்லாவின் தேசிய மாநாட்டுக் கட்சியின் சார்பாக 75 உறுப்பினர்கள் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பிரஜா பரிஷத் சார்பில் போட்டியிட்டவர்களின் *வேட்புமனுக்கள்