பக்கம்:பாவேந்தர் படைப்பில் அங்கதம்.pdf/18

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


முருகு கந்தரம் -இ என்று. துள்ளிக் குதிக்கிறான். கதிரவனின் சுடுவெயிலுக் கஞ்சி நாம் குளிர்நிழலைத் தாவுகிறோம். ஆனால், வெயிலைப் போல் அழகான பதார்த்தம் இல்லை - என்று பாரதியால்தான் கூற முடிகிறது. இயற்கை, கவிஞனின் ஐம்புலன்களையும் தன்பால் கவர்ந்து இழுப்பதற்குக் காரணம் இயற்கையோடு பிரிக்க முடியாதபடி ஒன்றியிருக்கும் அழகுதான். அழகை நிலையான பேரின்பமாகக் கவிஞர்கள் கருதுகின்றனர். எங்கு அழகு தன் சிறகை விரிக்கிறதோ, அங்கெல்லாம் கவிஞன் பறந்து செல்கிறான். காலையிளம் பரிதியிலே அவளைக் கண்டேன்! கடற்பரப்பில், ஒளிப்புனலில் கண்டேன்! அந்தச் சோலையிலே மலர்களிலே, தளிர்கள் தம்மில் தொட்டஇடம் எலாம்கண்ணில் தட்டுப்பட்டாள்! மாலையிலே மேற்றிசையில் இலகு கின்ற மாணிக்கச் சுடரிலவள் இருந்தாள்; ஆலஞ் சாலையிலே கிளைதோறும் கிளியின் கூட்டந் தனில்அந்த அழகென்பாள் கவிதை தந்தாள் என்று பாரதிதாசன் பாடுவதற்கு இயற்கை குவிதது வைத்த அழகே காரணம். நல்லழகு வசப்பட்டால், துன்பம் இல்லை என்பது அவர் கருத்து. பாரதிதாசன் உள்ளம் இயற்கையில் எவ்வாறு கரைகிறது என்பதை அருகில் இருந்து பார்க்கும் வாய்ப்பு ஒருமுறை எனக்கு ஏற்பட்டது. பாரதிதாசன் சென்னை இராமன் தெருவில் குடியிருந்தபோது, ஒருநாள் முன்னிரவில், அவரோடு முற்றத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தேன். திடீரென்று அவர் பேச்சு நின்றது. ‘எங்கிருந்து வருகிறது இந்தக் கடிமணம்” என்று என்னைப் பார்த்துக் கேட்டார். உடனே நரன் மணம் வந்த திசைநோக்கிச் சென்றேன். அவர் வீட்டு வேலியில் நைட்