பக்கம்:பாவேந்தர் படைப்பில் அங்கதம்.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- பாவேந்தர் படைப்பில் அங்கதம்-இ இப்பிரச்சனைக்குத் தீர்வுதான் என்ன? இதற்குப் பலரும் பலவிதமான கருத்துக்களை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றனர். அமெரிக்கா போன்ற உலக வல்லரசுகள், காஷ்மீர்ப் பிரச்சனையைத் தீர்ப்பதை விடக் கிழக்காசியாவில் தங்கள் மேலாதிக்கத்தை நிலை நிறுத்த ஒரு பகடைக்காயாகவே அதைப் பயன்படுத்தி வருகின்றனர். காஷ்மீர் முதலமைச்சராக உள்ள ஃபாரூக் அப்துல்லா காஷ்மீர்ப் பிரச்சனையின் தீர்வுக்கு ஒரு கருத்தை வெளியிட்டார். தங்கள் கைவசம் இருக்கும் காஷ்மீர்ப் பகுதிகளை இந்தியாவும் பாகிஸ்தானும் அவரவர்களே வைத்துக் கொள்ளலாம் என்பது அவர் வெளியிட்ட கருத்து. இந்திய அரசியல் கட்சிகள் இக்கருத்தை வன்மையாக எதிர்த்தன. 2000 ஆண்டு நவம்பர் 14 ஆம் நாள் மயிலை பாரதி வித்யாபவன் நிகழ்ச்சியில் பங்கு கெண்ட மூத்த அரசியல் தலைவர் சி. சுப்பிரமணியம் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்ட கீழ்க்கண்ட செய்திகளை இந்தி அரசியல் வாதிகளின் கவனத்துக்குக் கொண்டுவர விரும்புகிறேன். 'நடுநிலையாகச் செயல்படக் கூடிய மூன்றாவது நாட்டின் மத்தியஸ்தத்தின் மூலம் காஷ்மீர்ப் பிரச்சனைக்குத் தீர்வு காணலாம். அல்லது மண்டேலா, கார்ப்பச்சேவ், கார்ட்டர் போன்ற் உலகின் தலைசிறந்த தலைவர்களைக் கொண்ட குழுவின் மூலமும் தீர்வு காணலாம். “அல்லது ஆசிரியர்கள், ஒய்வு பெற்ற நீதிபதிகள், அறிவியல் வல்லுநர்கள், பாதுகாப்புத்துறையில் உயர்நிலையில் பணியாற்றியவர்கள், சிந்தனையாளர்கள் போன்ற ஆறு அல்லது எட்டு பேரைக் கொண்ட தனித்தனிக் குழுக்களை இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் அமைக்க வேண்டும்.