பக்கம்:பாவேந்தர் படைப்பில் அங்கதம்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர் படைப்பில் அங்கதம் 一四 வண்ணங்கள் கவிஞர்களின் கட்புலனுக்கு வண்ணங்கள் எப்போதும் பெருவிருந்தாக அமைவதுண்டு. இயற்கை தன் உடலில் பூசியிருக்கும் வண்ணக் கலவைகளையும், வண்ண வேறுபாடுகளையும் அவர்கள். கூர்ந்து கவனிக்கிறார்கள்; அவற்றை மெருகு குலையாமல் கவிதையிலும் தீட்டி விடுகிறார்கள். - ஆங்கிலக் கவிஞர்களுள் கீட்சை வண்ணக் கவிஞன் (Poet of colour) என்று சிறப்பாகத் திறனாய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். அவனுக்கு இரத்தச் சிவப்பு (Crimson) மிகவும் பிடித்தமான வண்ணம். இந்த வண்ணத்தை வைத்துக் கொண்டு, கவிதையில் அவன் சித்து விளையாட்டு நிகழ்த்துகிறான். கோப்பையில் நுரைத்துத் ததும்பும் மதுவைச் 'சிவந்த மது’ என்று அவன் குறிப்பிடவில்லை. நாணம் $ grubljub Logy” (The blushful Hippocrene) argir pi குறிப்பிடுகிறான். பெண் நாணும்போது அவள் கன்னத்தில் படர்வது இரத்தச் சிவப்பன்றோ? பாரதிதாசனுக்கும் வண்ணங்களில் அளவற்ற ஈடுபாடு உண்டு இயற்கையில் படிந்துள்ள வண்ண வேறுபாடுகளை எப்படியெல்லாம் பதிவு செய்ய முடியுமோ அப்படியெல்லாம் பாட்டில் பதிவு செய்கிறார். கவிதையில் வண்ண மாயங்களைப் பதிப்பதைப் பாரதிதாசனுக்கு ஒப்பாக வேறு எந்தக் கவிஞரையும் குறிப்பிட முடியாது. கவிதை ஆற்றலோடு ஒவிய நுட்பமும் கைவரப் பெற்றவர் அவர் என்று சொல்லலாம். குயிலை, பொதுவாகக் கருங்குயில் என்போம். ஆனால் குயில் கறுப்பில்லை. அதன் கறுத்த மேனியில் இலேசாகத் தங்கமுலாம் பூசியதுபோல் இருக்கும். இந்த மாயம் பாரதிதாசனின் கூர்த்த கட்புலனுக்குத் தான் தட்டுப்பட்டது. -