பக்கம்:பாவேந்தர் படைப்பில் அங்கதம்.pdf/26

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


முருகு சுந்தரம் 一函 இப்படித்தான் பாட வேண்டுமென்றிருந்த செக்கு மாட்டுத்தனத்தை ஒழித்து, எதையும் பாடலாம், எப்படியும் பாடலாம் என்ற நிலையை இருவரும் தமிழுக்குக் கொண்டு வந்தனர். கவிதையில் இவர்களுடைய தன்னுணர்ச்சிப் பார்வை விரிந்தது. பழைய செய்யுட்களின் கடினத்தைக் குறைத் து இசையோடு கூடிய வழக்கு மொழியில் பாடத் தொடங்கினர். தமிழுக்குப் புதிய வரவுகள் கிடைத்தன. பறவைகளைப் பற்றிப் பாரதிதாசன் புனைவியல் பாடல்கள் பல பாடியிருக்கிறார். அதில் வானம்பாடி குறிப்பிடத் தக்கது. பாரதிதாசன் பாடிய வானம்பாடிப் பாடலுக்கும், ஆங்கிலக் கவிஞன் வொர்ட்ஸ் வொர்த் பாடிய கக்கூ (Cuckoo) என்ற பாடலுக்கும் ஒரு பொதுத்தன்மை இருக்கக் காணலாம். சிறுகுன்றுகள் சூழ்ந்த 'ஸ்காத்லாந்து ஏரிக்கரையில் படுத்த வண்ணம், இயற்கை அழகை மாலை நேரத்தில் சுவைப்பது வொர்ட்ஸ்வொர்த்தின் விடுமுறைக்காலப் பொழுது போக்கு. அவ்வாறு படுத்திருக்கும்போது உள்ளத்தை உருக்கும் ஒரு தேனிசை வானவெளியில் வட்டமிடுவதைக் கேட்டான். ஆனால் அந்த இசை எங்கிருந்து வருகிறது என்று அவனுக்குத் தெரியவில்லை. அந்த இசையை எழுப்புவது யார் என்றும் அவன் கண்ணுக்குப் புலனாகவில்லை. அந்த இசை ஒரு குன்றிலிருந்து மற்றொரு குன்றிற்கும், ஓர் இளமரக் காட்டிலிருந்து மற்றோர் இளமரக்காட்டிற்கும் சுற்றிச் சுற்றி வந்தது. அந்த இசைப் பயணத்தைப் பொருத்தமான சொற்றொடர் ஒன்றால் குறிப்பிடுகிறான் வொர்ட்ஸ் வொர்த் Wandering voice என்பதே அச்சொற்றொடர். வொர்ட்ஸ் வொர்த்துக்கு ஏற்பட்ட அதே மயக்கம் வானம் பாடியின் இன்னிசையைக் கேட்ட