பக்கம்:பாவேந்தர் படைப்பில் அங்கதம்.pdf/43

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


- பாவேந்தர் படைப்பில் அங்கதம்-E) இலைபோட் டழைத்ததும் நகைபோட்ட பக்தர்கள் எல்லாரும் வந்து சேர்ந்தார்! ஏக நாதர் மட்டும் அங்குவர வில்லையே இனியபா ரததேச மே. என்று கூறிப் பாடலை முடிக்கிறார். இப்பாடலில் பழிகரப்பங்கதத்துக்குரிய எள்ளல் துள்ளிக் குதிக்கிறது. பெண்கள் நகை அணிந்து கொள்ளும் எட்டுறுப்புக்களையும் ஒரே அடியில் கவிஞர் வரிசைப்படுத்தும் அழகு அவரது கவிதையாற்றலைப் புலப்படுத்துவதாக அமைந்துள்ளது. பாதிரியார் எழுதிய இரண்டாவது அறிக்கை பெண்டிரின் நகையணியும் அளவற்ற விருப்பத்தையும், அடிக்கடி கண்ணாடியில் முகம்பார்த்து ஆனந்திக்கும் விருப்பத்தையும் குத்திக் காட்டுகிறது. பக்திப் பரவசத்தில் ஈடுபட்டுப் பக்தர்கள் கோயிலுக்குத் தாமாக வரவேண்டும். இங்குப் பக்தர்கள் வருந்தி அழைக்கப்படும் நிலையைக் கவிஞர் இலைபோட் டழைத்ததும்' என்ற சொற்றொடரால் குறிப்பிடுகிறார். “நகைபோட்ட பக்தர்கள்’ என்ற தொடர் பக்தர்களின் போலித் தன்மையைப் புலப்படுத்துகிறது. "ஏசுநாதர் மட்டும் அங்கு வரவில்லையே’ என்ற அடியால் தொழுகை பயனற்றதாகிறது என்பதும் குறிப்பிடப்படுகிறது. "ஏசுநாதர் ஏன்வரவில்லை?” என்பது இவ்வங்கதப் பாடலின் தலைப்பு. வரதட்சணைக் கொடுமை தமிழர் சமுதாயத்தைப் பிடித்த ஒரு கொடிய நோய். இந்நூற்றாண்டின் தொடக்கத்தில் பார்ப்பனர் சமுதாயத்தைப் பற்றி உலுக்கிய இந்த நோய், பின்னர் பார்ப்பனர் அல்லாதாரையும் தெ:ற்றிக் கொண்ட து.