பக்கம்:பாவேந்தர் படைப்பில் அங்கதம்.pdf/51

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பாவேந்தர் படைப்பில் அங்கதம்-(இ) மாளிகையின் உள்ளே மனிதர் கூட்டத்தையும் ஆளிவாய்ப் பாகவதன் அங்கு நடுவினிலே உட்கார்ந் திருப்பதையும், ஊர்மக்கள் செல்வதையும், பட்டை நாமக்காரப் பாகவதன் ரூபாயைத் தட்டிப் பார்ப்பதையும், சந்தோஷம் கொள்வதையும் கண்டார்கள். தான் ஏளனத்துக் காளானதைக் கண்டு குப்பன் சிரித்தான். சேக்ஸ்பியர் தம் நாடகங்களில் ஆடவர்களைவிடப் பெண்களை அறிவுக் கூர்மையும் சாதுரியமும் மிக்கவர்களாகப் படைத்துக் காட்டியுள்ளார். அவரைப் போலவே பாவேந்தரும் தம் பெண்பாத்திரங்களான அமுதவல்லி, பூங்கோதை, சுப்பம்மாள், தங்கம், விஜயராணி ஆகியோரையும் அறிவும் ஆற்றலும் மிக்கவர்களாகப் படைத்துள்ளார். வேட்டுவப் பெண்ணான வஞ்சியையும் தம் கணவனுக்கு அறிவு கொளுத்தும் ஆரணங்காகச் சஞ்சீவி பர்வதத்தின் சாரலில் வடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. வானளவும் அங்கங்கள், வானரங்கள், ராமர்கள் ஆனது செய்யும் அனுமார்கள், சாம்பவந்தர், ஒன்றல்ல; ஆயிரம் நூல்கள் உரைக்கட்டும்! விஸ்வரூபப் பெருமை, மேலேறும் வன்மைகள், உஸ்ஸென்ற சத்தங்கள், அஸ்ஸென்ற சத்தங்கள் எவ்வளவோ நூலில் எழுதிக் கிடக்கட்டும் செவ்வைக் கிருபை செழுங்கருணை அஞ்சலிக்கை முத்தி முழுச்சுவர்க்கம் முற்றும் உரைக்கட்டும். இத்தனையும் சேரட்டும் என்ன பயனுண்டாம்? உள்ள பகுத்தறிவுக் கொவ்வாத ஏடுகளால் எள்ளை அசைக்க இயலாது - என்று கூறும்போதும், மீளாத மூடப் பழக்கங்கள் மீண்டும்உமை நாடா திருப்பதற்கு நானுங் களையின்று சஞ்சீவி பர்வதத்தின் சாரலுக்குக் கூப்பிட்டேன்