பக்கம்:பாவேந்தர் படைப்பில் அங்கதம்.pdf/54

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


முருகு சுந்தரம் 一函 சொல்ல முடியாது. என்றாலும் இதில் அவர் கையாண்டிருக்கும் அங்கத உத்திகளும், உவமைகளும் சிறப்பாக உள்ளன. “குடும்ப முன்னேற்றம் நாட்டின் முன்னேற்றம். முன்னேற்றம் உடைய குடும்பம் எப்படியிருக்கும் என்பது பற்றிய என் எண்ணத்தான் இந்தச் சிறிய நூல்! நல்ல குடும்பம் பல்கலைக் கழகம்’ என்று குடும்பவிளக்கை முன்னுரையில் அறிமுகப்படுத்துகிறார். குடும்ப விளக்கின் தலைவியை முதன்முதலில் அறிமுகப்படுத்தும்போது, துரக்கத் தோடு துரங்கி யிருந்த ஊக்கமும் சுறுசுறுப் புள்ளமும் மங்கை எழுந்ததும் எழுந்தன. இருகை வீசி! தெளிவிலாக் கருக்கலில் ஒளிபடும் அவள்விழி குளத்து நீரில் குதிக்கும் கெண்டைமீன் என்று சுறுசுறுப்போடு அறிமுகப் படுத்துகிறார் பாவேந்தர். ஆனால் இருண்ட வீட்டுத் தலைவியின் திருப்பள்ளி யெழுச்சியை, நாயின் அலறல் நற்பசுக் கதறல் பானையின் படபடா பையனின் ஐயோ இத்தனை முழக்கில் ஏந்திழை புரண்டு பொத்தல் மரத்தின் புழுப்போல் நெளிந்தே எழுந்தாள் அவளோ, பிழிந்து போட்ட கருப்பஞ் சக்கையின் கற்றைபோல் இருந்தாள் என்று அலங்கோலத்தோடு அறிமுகப்படுத்துகிறார். “குளத்து நீரில் குதிக்கும் கெண்டைமீன்' என்று குடும்பவிளக்குத் தலைவியின் கண்களைப் பாராட்டிய பாவேந்தர் இருண்ட வீட்டின் தலைவியின் கண்களை, பாதி திறந்த கோதையின் விழியோ பலகறை நடுவில் பதிந்த கோடுபோல்