பக்கம்:பாவேந்தர் படைப்பில் அங்கதம்.pdf/71

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


- பாவேந்தர் படைப்பில் அங்கதம்-இ (4) மகாகவி பாரதிதாசன் உலக மக்கள் உள்ளத்தில் காலத்தால் அழிக்க முடியாத கல்வெட்டுகளாக இடம் பெறுபவர்களே மகாகவிகள். தமிழகத்தில் மகாகவிகள் வரிசையில் இடம் பெறும் தகுதி பெற்றவர்கள் ஐவர். திருவள்ளுவர், இளங்கோ, கம்பன், பாரதி, பாரதிதாசன் ஆகியோரே அவர்கள். ஒருவன் மகாகவி என்று அறியப்படுவதற்கு அவன் படைப்புகளே உரைகல், இருபதாம் நூற்றாண்டில் கவியரசுகள், கவிமணிகள், வெண்பாப் புலிகள், ஆசு கவிகள், அருட் கவிகள் என்று நூற்றுக்கணக்கானவர் இருந்திருக்கிறார்கள். ஆனால் அவர்கள் சாதித்தவை மிகக் குறைவு. பாரதிதாசன் படைப்புகள் தமிழையும், தமிழினத்தையும் உயர்த்தியிருக்கின்றன; தமிழுக்குப் புதிய பாதைகளை வகுத்துக் கொடுத்திருக்கின்றன. அவர் படைப்புகளின் தாக்கம் தமிழ்மக்களின் உள்ளத்தை மாற்றியிருப்பதோடு, தமிழக அரசியலையும் மாற்றும் ஆற்றல் பெற்றிருந்தது. புதிய பாதைகள் கடந்த சில நூற்றாண்டுகளாக, தமிழ்க் கவிதைத் துறையில் பெரிய தேக்கம் ஏற்பட்டிருந்தது. சிறு பிரபந்தம் என்ற பார்த்தீனியப் புதர் தமிழ்நாடெங்கும் செழித்து வளர்ந்தது. குறுநிலமன்னர், நிலப்பிரபுக்கள் ஆகியோரின் காதல் லீலைகளையும், பாலியல் வக்கிரங்களையும், உலா,