பக்கம்:பாவேந்தர் படைப்பில் அங்கதம்.pdf/73

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பாவேந்தர் படைப்பில் அங்கதம் - வண்டிக்காரன், மாடு மேய்ப்பவன், ஆலைத் தொழிலாளி, காடைக்காரக் குறவன், கூடைக்காரக் குறத்தி, செப்படி வித்தைக்காரன், பூக்காரி, பாவோடும் பெண் - இப்படிப் பாரதிதாசனின் பாட்டுடைத் தலைவர் தலைவியர் பட்டியல் நீள்கிறது. உள்ளே இருப்பவர் முதலாளிச்செட்டி ஏறுகால் மேல்தானென் சர்க்கரைக் கட்டி தெரியவில்லையோடி தலையில் துப்பட்டி? சேரனே அவர் என்றால் அதில் என்ன அட்டி? a $ to a -- * - - - - அதோ பாரடி! என்று இசை முழக்கோடு எக்காளமிடுகிறது அவரது வண்டிக்காரன் பாட்டு. மேலை நாடுகளில் வோர்ட்ஸ் வொர்த், ஷெல்லி, கீட்ஸ் போன்ற கவிஞர்கள் இயற்கையைப் பற்றித் தனிக் கவிதைகள் நிறையப் பாடி 'இயற்கைக் கவிதை' என்ற தனித்துறையைத் தோற்றுவித்தனர். இயற்கையைத் தமிழில் தனித் துறையாகப் பாடியவர் எவருமில்லை. சங்க இலக்கியங்களிலும் பிற இலக்கியங்களிலும் இயற்கை வருணனை அங்கொன்றும் இங்கொன்றுமாக இடம் பெற்றிருந்ததே தவிர, தனித் துறையாக அமையவில்லை. பாரதிதாசன் தான் முதன்முதலாக ‘அழகின் சிரிப்பு' என்று இயற்கையின் சிறப்பைத் தனிநூலாகப் பாடினார். செக் நாட்டுத் தமிழறிஞராகிய காமில் செலபில் என்பவர் இந்நூலைப் பார்த்துவிட்டு, 'இந்நூலின் தலைப்பே ஒரு கவிதை” என்று பாராட்டினார். தமிழ்க் கவிஞர் சிலர் தமிழின் சிறப்பையும் இனிமையையும் சில தொடர்களிலும் சில தனிப்பாடல்களிலும் ஆங்காங்கே குறிப்பிட்டுச் சென்றனர். ஆனால் தமிழைப் பற்றியும், அதன் சிறப்பைப் பற்றியும்,