பக்கம்:பாவேந்தர் படைப்பில் அங்கதம்.pdf/75

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பாவேந்தர் படைப்பில் அங்கதம் ஆங்கில இலக்கியப் பயிற்சி கிடையாது. அவர் தனித்தமிழ்ப் புலவர். சஞ்சீவி பர்வதத்தின் சாரல், அவர் சிந்தையில் தனித்துவத்தோடு தோன்றிய ஒப்பற்ற கற்பனை. இந்நூல் 1930 இல் அவருடைய நண்பராகிய நோயல் என்பவரால் வெளியிடப்பட்டது. செம்பொருள் அங்கதம் தனிப்பட்ட ஒரு மனிதனிடத்திலோ, சமுதாயத்திலோ உள்ள குறைகளை நேரடியாகச் சாடுவது, பழிகரப்பங்கதம் நகைச்சுவை பொருந்தக் கேலி செய்வது. பாரதிதாசன் இரண்டிலும் ᎧaᏗ©uᎩᎶᎡX©JfᎢ . தமிழ்ச் சமுதாயத்தில் உள்ள மூடநம்பிக்கையைச் சஞ்சீவி பர்வதத்தின் சாரலில் நயம்படக் கேலி செய்கிறார். மேலை நாட்டு ஆசிரியர்கள் தம் அங்கதக் காப்பியங்களில் கையாண்டிருக்கும் இயல்நிலை கடந்த 2, #36 ou (Supernatural element) @61(51b Q3,371/17us;56b சிறப்பாகக் கையாண்டு வெற்றியும் பெற்றிருக்கிறார். 'பெண் குரங்குத் திருமணம்’, ‘ஏசுநாதர் ஏன் வரவில்லை?’, ‘நம் மாதர் நிலை”, “எமனை எலி விழுங்கிற்று” என்ற தனிப் பாடல்களும் பழிகரப்பங்கதத்திற்கு அருமையான எடுத்துக்காட்டுகள். ஒர் ஒழுங்கற்ற குடும்பத்தின் நடவடிக்கைகளை "இருண்ட வீடு' என்ற நூலில் அவர் கேலி செய்திருக்கும் நயம் மீண்டும் மீண்டும் படித்து மகிழத் துண்டுவது. இந்நூற்றாண்டின் தொடக்கத்தில் கைம்பெண் மணத்தை ஆதரித்து எழுத எழுத்தாளர்கள் அஞ்சினர்; பழமை வாதிகளின் எதிர்ப்புக்கு நடுங்கினர். காந்தியடிகள் கூட பருவம் அடைவதற்கு முன் கணவனை இழந்த இளம் கைம்பெண்கள் வேண்டுமானால் மறுமணம் செய்து கொள்ளலாம்’ என்று "யங் இந்தியா ஏட்டில் எழுதினார். -