பக்கம்:பாவேந்தர் படைப்பில் அங்கதம்.pdf/89

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பாவேந்தர் படைப்பில் அங்கதம் .” டு) புதுக்கவிதையில் இருண்மை முன்னுரை இருண்மை என்பது தெளிவற்ற தன்மை. பிரபந்தக் காலத்தில் ஆட்சி செய்த சிலேடை யமகம், திரிபு, சித்திர கவிதை ஆகியவற்றிலேயே இருண்மை தொடங்கிவிட்டது. என்றாலும் இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தமிழ்க் கவிதையில் ஏற்பட்ட இருண்மைக்கு ஐரோப்பியக் கவிதைகளின் தாக்கமே காரணம். 19 ஆம் நூற்றாண்டில் அறிவியல், பொருளியல், அரசியல், புவியியல், உளவியல், தத்துவவியல் ஆகியவற்றில் ஏற்பட்ட வளர்ச்சியும், பொருள் முதல் வாதமும், மார்க்சியச் சிந்தனையும் புரட்சிகரமான மாறுதல்களைத் தோற்றுவித்தன. ஒவ்வொரு கலையிலும் சிறப்புத்துறைகள் (Specialization) தோன்றிக் கிளைத்தன. ஓர் இயற்பியல் வாதியின் மொழி, மற்றோர் இயற்பியல் வாதியாலும், ஒரு துறையைச் சார்ந்த சிற்பி ஒவியர் அல்லது இசைமேதைகளின் நுட்பம், அவ்வத்துறையைச் சார்ந்த மற்ற கலைஞர்களாலும் மட்டுமே புரிந்து கொள்ளப்பட்டன. இப்பாதிப்பு கவிதையிலும் தனித்தன்மை வாய்ந்த சிறப்புப் பிரிவுகளைத் தோற்றுவித்தது. அப்பிரிவுகளில் குறிப்பிடத்த்க்கல்வ góluĵı: 1ą uusi (Symbolism), tổ@loliitbsoudustusò (Surrealisum), L|šrîu16ï) (mysticism), Llug LD6îu@ (Imagism) GrŵrLlaNT. ஐரோப்பியக் கவிதைகளில் இருண்மை படர்வதற்கு இவை அடிப்படையாக விளங்கின. பிரெஞ்சுப் புரட்சிக் காலத்திலும், ஜெர்மனியில் நாஜிசமும், இத்தாலியில்