பக்கம்:பாவேந்தர் படைப்பில் அங்கதம்.pdf/96

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


இ)- முருகு சந்தரம் -இ மாபெரும் சிறகுச் சுமையே பூமியில் அதனை முடமாக்கிவிட்டது. "வான மண்டலத்து இளவரசன்’ என்று பாராட்டப்படும் இந்தக் கடற்பறவை நீண்ட சிறகுகள் உடையது. வானத்தை அனாயாசமாக அளக்க உதவும் அப்பெரிய சிறகுகளே, பூமியை அடைந்ததும் அதற்குப் பெரிய சுமையாக மாறி விடுகின்றன. அவற்றைத் தூக்கிக் கொண்டு அப்பறவையால் அடியெடுத்து வைக்க முடியவில்லை. போதலேர் தனது ஆற்றல் மிக்க கற்பனைச் சிறகுகளின் உதவியோடு சொர்க்க மண்டலத்தில் பறந்தாலும், இவ்வுலகப் பற்றும், சிற்றின்ப இச்சையும் தம்மைப் பிணித்து முடக்கிவிடுவதாக வருந்துகிறான். அந்த வருத்தத்தின் குறியீடே இப்பாடல். தமிழ்ப் புதுக் கவிஞர்களுள் இருண்மை மிக்க கவிதைகள் படைக்கும் "அருவக் கவிஞர் அபிபுல்லா. அவர் எழுதிய ராப்பிச்சைக்காரன்” குறியீட்டுக் கவிதைக்குச் சிறப்பான எடுத்துக்காட்டு. இக்கவிதையில் இடம் பெற்றுள்ள ராப்பிச்சைக்காரன் காமத்துக்குக் குறியீடு படிக்கப் படிக்கத்தான் அக்குறியீடு என்ன என்று நமக்குப் புரியும். ஒவ்வொரு படிமமும் படிக்கப் படிக்க நம்மை மெய்மறக்கச் செய்கின்றன. - போபோ போய்விடு போய்விடு போய்விடு ராத்திரிப் பிச்சைக்காரனே மணந்து கருவுற்ற தென்றல் உன் விஷ வேர்வை உறிஞ்சித் தனக்குள் தான் புதையவும்... என்ன புழுக்கம்