பக்கம்:பாவேந்தர் படைப்பில் அங்கதம்.pdf/95

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பாவேத்தர் படைப்பில் அங்கதம் இறைச்சி, உள்ளுறை உவமம் என்று தமிழ் இலக்கணங்களில் பேசப்படுபவையும் குறியீட்டு உத்திகளே. சங்க இலக்கியங்களிலும் சித்தர் பாடல்களிலும் குறியீட்டு உத்தி பரவலாகக் கையாளப்பட்டிருந்தாலும், அதுவோர் தனிக் கவிதைத் துறையைத் தமிழில் தோற்றுவிக்கவில்லை. பிரெஞ்சு நாட்டில் குறியீட்டியக்கம் (Symbolic movement) என்று தனி இயக்கமே இருந்தது. இக்குறியீட்டியக்கத்தின் "பிதாமகன்’ என்று கருதப்படுபவன் பிரெஞ்சுக் கவிஞனான போதலேர் (Baudelaire). I gjargör GT(ip@uggiram ‘Gi bupgooi' (Albatross) சிறந்த குறியீட்டுப் பாடலாக எல்லாராலும் போற்றப்படுகிறது. வட்டமிடும் பேரழகாக வானத்தின் உச்சியில் மிதந்த அந்தப் பறவை இப் போது - கேலிக்குரிய பொருளாகி விட்டது. குழல் போன்ற அதன் நீண்ட மூக்கையும் நடக்க முடியாத அதன் கால்களையும் பற்றியிழுத்து மாலுமிகள் விளையாடுகின்றனர். வேட்டைக்காரர்களின் அம்புகளுக்கு எட்டாமல் சூறாவளியைச் சுவைத்துப் பறந்த மேகமண்டலத் திளவரசன் இப்போது மண்ணில்? துடுப்புப் போல் நீண்ட அதன் -