பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன்.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

— #76 —

  • தமிழுயர்ந்தால் தமிழ்நாடு தானுயரும்

அறிவுயரும் அறமும் ஒங்கும்: இமயமலை போலுயர்ந்த ஒருநாடும் தன்மொழியில் தாழ்ந்தால் வீழும்’ "தாய்மொழி நூற்றுக்கு நூறுபெயர்-பெறத் தக்கதோர் கட்டாயம் ஆக்கிவிட்டால் போய்விடும் கல்லாமை' செந்நெ: மாற்றிய சோறும்-பசுநெய் தேக்கிய கறியின் வகையும், தன்னிகர் தானியம் முதிரை-கட்டித் தயிரொடு மிளகின் சாறும் நன்மதுரஞ்செய் கிழங்கு-காணில் நாவில் இனித்திடும் அப்பம் உன்னே வளர்ப்பன தமிழா-உயிரை உணர்வை வளர்ப்பது தமிழே!” தமிழ்வளர்ச்சி யாலிந்த வையகமே உயுமாம்! தண்டமிழ்ப்பா வேந்தனவன் சொல்லுவதைக் கேட்பீர்! வையகமே உய்யுமாறு வாய்த்த தமிழ். என்அரும் பேறு' தமிழ்வளர்ச்சித் திட்டமொன்றே அவனின் தமிழ் இயக்கம் தமிழியக்கம் நூல்போதும் அவன்பெருமை சாற்ற! தமிழ்வளர்க்காத் தமிழினமோ தாம்வளர்தல் இல்லை தன்மொழி,கா வாதஇனம் வளர்ந்ததுண்டோ உலகில் ஒண்டமிழ்த்தாய் சிலம்படியின் முன்னேற்றம் ஒவ்வொன்றும் உன்முன் னேற்றம்' உன்தமிழ்த்தாய் இந்நிலத்தில் அடைகின்ற வெற்றியெலாம் உன்றன் வெற்றி