பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

– 2 – தமிழ் நாட்டின் உணர்வெழுச்சிக் கதையாகும்; தமிழர்தம் மான உணர்வுக்குக் கலங்கரை விளக்காகும். தமிழ் உள்ள வரை நிலைத்து நிற்கும் ஆற்றல்வாய்ந்த அவரின் இனிய, எளிய, செந்தமிழ்ப்பாடல்கள் அவர்தம் நினைவுப் படிமமாக என்றென்றும் தமிழ் மக்கள் தம் நெஞ்சங்களில் ஒலிக்கும்: அவர் வாழ்க்கைக்கு வழிகாட்டிக் கொண்டிருக்கும் அவர்தம் நாடி நரம்புகளை முறுக்கேற்றிக் கொண்டிருக்கும்! அ வ ர் வாழ்வு ஒரு பாட்டு இலக்கியம். - புதுவையில் பெரிய சரக்கு மண்டியொன்று வைத்துப் பெருநிலை மளிகை வாணிகராக இருந்த திரு. கனகசபை என்பார்க்கும் மகாலட்சுமி அம்மைக்கும் 1891-ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 29-ஆம் நாள், திருமகனுகப் பிறந்தார் நம் பாரதிதாசன். இவரின் இயற் பெயர் சுப்புரத்தினம் என்பது. இளமையிலேயே சுறுசுறுப்பும், இயற்கைமேல் நாட்டமும், இசை விருப்பமும் கொண்டவராக இவர் இருந்தார். அக் காலத்தில் புதுச்சேரி பிரெஞ்சுக்காரரின் ஆட்சிக்குரியதாக இருந்தமையால், பள்ளியில் பிரெஞ்சு மொழியே சிறப்பாகச் சொல்லித் தரப்பெற்றது. சுப்புரத்தினமும் பிரஞ்சு மொழிப் பள்ளியில் சேர்க்கப்பெற்ருர். எனினும் இவர்க்கு இயற்கை யிலேயே இருந்த தணியாத தமிழார்வத்தாலும், இயல், இசை, நாடகப்பற்ருலும் தமிழ்க் கல்வி கற்கவே இ வ. ர் பெரிதும் விரும்பினர். எனவே இவர் தந்தையார் இவரைத் தமிழ்க் கல்வி கற்கச் செய்தார். பள்ளிப்பயிற்சியுடன் இவர், பேராசிரியர் பு:ஆ பெரியசாமி என்னும் தமிழ்ப் பேரறிஞ ரிடம் தமிழ்க்கல்வி பயின்ருர். இவரே இவரின் முதலாசிரியர் எனலாம். சுப்புரத்தினம் நாளுக்குநாள் தமிழில் மிக ஈடுபாடு காட்டி வந்தார். இவரின் தமிழ்த் தேர்ச்சிக்கு உறுதுணை யாக இருந்தவருள் புலவர் சி. பங்காரு என்பவரும் ஒருவர். அவர்பால் இவர் தமிழ் கற்கப் புகுந்த முதல்நாள், இவரு டன் வேறு மாணவர் சிலரும்வந்திருந்தனராம்; அவர்களிடம்