பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன்.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21. பெண் பேச்சாளர் பாதுகாப்புக் கேட்டது! ஒரு நாள் மாலை பாவேந்தரும் நானும் அவர் வீட்டுத் தெரு வாயிற் படியில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தோம். பகல் ஒளி மங்கியிருந்ததால் தெருவில் போவோர் முகங்கள் அவ்வளவு தெளிவில்லாமல் இருந்தன. அம்பொழுது சென்னையிலிருந்து தி. மு. க. பெண் பேச் சாளர் ஒருவர், பாவேந்தரைத் தேடிக் கொண்டு அங்கு வந்து பாவேந்தரிடமே, 'பாரதிதாசன் இருக்கிருரா? என்று கேட்டார். 'ஏன்? என்னவேண்டும்? நீ யார்?' என்ருர் பாவேந்தர் தமக்கே உரிய மிடுக்கோடு. அந்த அம்மையார் சட்டென்று அவரை உணர்ந்து கொண்டவராய், "ஓ! ஐயா, மன்னிக்க வேண்டும். நான் நாளை ஒரு நிகழ்ச்சிக் காகச் சென்னையிலிருந்து வருகின்றேன். என் பெயர் இது: வென்று கூறிப் பெயரைக் கூறினர். பாவேந்தர் "ஓ! அது நீதான? என்ன வேண்டும்” என்று கேட்டார். அதற்கு அந்தப் பெண், இல்லை இங்கு இரவு தங்கு வதற்குப் பாதுகாப்பான இடம் வேண்டும். அதுதான்.... கேட்டேன்’ என்ருர். உடனே, அவர், 'உள்ளே, அம்மா இருப்பார்கள், போய்க் கேள்’ என்று அவரை உள்ளே அனுப்பிவைத்தார். அவர் உள்ளே போனவுடன், பாவேந்தர் என்னைப் பார்த்து ஒரு சிரிப்புச் சிரித்து விட்டுப், பாதுகாப்பான இடம் வேண்டுமாம் இவளுக்கு என்னிடமே வந்து கேட் கிருள் நம் வீட்டை விடப் பாதுகாப்பான இடம் வேறு எங்குப் போவ்து? என்ருர், மிக அழுத்தமான குரலில்!