பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன்.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 செய்ய வேண்டியது.! ஒருமுறை ஏ.பி. நாகராசன் நடத்திய சாட்டை என்ற இதழில் பாவேந்தரைப் பற்றித் தவருகவும் தரக்குறைவா கவும் ஒரு செய்தி வெளியிடப்பெற்றிருந்தது. பாரதியார் காலத்து அவருடன் இருந்த பாரதிதாசன் அவர் பாடல்களை யெல்லாம் திருடி வைத்துக்கொண்டு, அவர் இறந்தபின் அப் பாடல்களே ஒவ்வொன்ருகத் தம்முடைய பெயரில் வெளி யிட்டு வ்ருவதாக வந்த செய்தி அது. இச்செய்தியை ஓர். அன்பர் படித்து விட்டுப் பாவேந்தரிடம் வந்து மிகவும் வருத்தத்துடன் கூறினர். அப்பொழுது பாவேந்தரின் அருகில் வேறு சிலருடன் நானும் நின்றுகொண்டிருந்தேன்: பாவேந்தர் செய்தியை அறிந்து சிறிதும் வருந்தாமல் அமைதி யாக இருந்தார். நான் உடனே அந்த அன்பரிடம் 'அந்த இதழையெல்லாம் ஏன் வாங்கிப் படிக்கிறீர்கள்?’ என்று கேட்டேன். அதற்கவர் 'வாங்கிப் படிப்பதால்தானே இதைத் தெரிந்து கொள்ள முடிகின்றது; எனவே அதில் பிழையில்லை’ என்று சொன்னர். நான் உடனே 'சரி; அந்தச் செய்தியைத் தெரிந்துகொண்டீர்களே, அதன்பின் என்ன செய்தீர்கள்?’ என்று கேட்டேன்: அவர் 'அதைத்தான் இப்பொழுது ஐயாவிடம் வந்து சொல்கின்றேன்; இன்னும் என்ன செய்ய வேண்டும்' என்று என்னை முறைத்தபடி கேட்டார் நான் என்ன சொல்லப் போகின்றேன் என்பதைப் பாவேந்தர் உட்பட எல்லோரும் எதிர்பார்த்துக் கொண்டி ருந்தனர்: நான் அவரிடம் ஐயா, அத்தகைய தாள்களை வாங்கிப் படிக்கக் கூடாது; வாங்கிப் படித்து இத்தகைய செய்திகள் வந்திருப்பதாகத் தெரிந்தால், அதை வாங்கிய கடையில் இன்னும் எத்தனைப் படிகள் இருக்கின்றனவோ அத்தனையையும் விலைகொடுத்து வாங்கி அக்கடை முன்பே ஒரு தீக்குச்சியைக் கிழித்துக் கொளுத்தி விட்டு வர வேண்டும்: அதுதான் நாம் அந்தச் செய்திகளை அறிந்து கொண்டதற்குக் சழுவாய்' என்று கூறினேன். பாவேந்தர் முகத்தில் எழுச்சி தோன்றியது. உடனே அந்த அன்பரிடம், "கேட்டியா...?