பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன்.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23. நான் யார் தெரியுமா? பாவேந்தருக்கு மகன்! 1956-57 வாக்கில், பாவேந்தர் மகன் மன்னர் மன்ன னுக்கும் பாவேந்தருக்கும் சிறு மனவேறுபாடு காரணமாக அவர் வீட்டை விட்டு வெளியேறித் தம் மனைவு சாவித்திரி யுடன் புதுச்சேரியிலேயே வேறு ஒரு பகுதியில் ஒரு தனி வீட்டில் இருந்து கொண்டிருந்தார். அப்பொழுது அவர்களின் மனவேறுபாட்டைக் களைகின்ற முயற்சியில் பாவேந்தர் குடும்பத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த பெரியவர்கள் சிலர் ஈடுபட்டனர். அவர்கள் பாவேந்தரை அணுகி அவர் மகன் மேல் அருள்காட்டி அவரை வீட்டிற்கு அழைத்துக் கொள்ள வேண்டுமென்ப தற்காகச் சில பல கருத்துகளைப் பாவேந்தரிடம் கூற முற் பட்டார்கள் அப்பொழுதெல்லாம் பாவேந்தர் அவர்களி டம், அதையெல்லாம் அவனிடத்தில் போய்ச் சொல்லுங்கள் எனக்கு எவரும் வந்து சொல்லவேண்டாம் என்று மன இறுக்கத்தோடு வெடுக்கென்று கூறிவந்தார்: இது தொடர்பாக நானும் இருவரையும் ஒப்புரவு செய்யும் முயற்சியில் ஈடுபட்டேன். தொடக்கத்தில் மன்னர் மன்னன், அதெல்லாம் உங்களிால் முடியாது. அவர் (பாவேந்தார்) அவருக்கு வேண்டிய பெரியவர்கள் சிலர் பேச்சையே ஒதுக்கித்தள்ளி விடுகிருர். உங்கள் பேச்சை எங்கே கேட்கப் போகிரு.ர். நீங்கள் வீணுக இதில் தலையிட்டு அவர் வெறுப்பைத் தேடிக் கொள்ள வேண்டாம்' என்று கூறி என்னைத் தடுத்தார். நானே "இல்லை; அவர்கள் போல் அல்லன் நான். நான் சொல்வதை உங்கள் தந்தை கேட் பார். முயற்சி செய்கின்றேன்” என்று கூறி, உறுதியுடன், பாவேந்தரிடம் பல நாட்கள் இது தொடர்பாகப் பேசிப் பார்த்தேன். ஒருமுறை, இரவு 10 மணி முதல் விடியற் காலை 4 மணி வரை இதுபற்றி மிகஅன்போடும்.அக்கறையோடும் பாவேந்தர்