பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன்.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

– 207 – தம் மகனின் பிழைகளே மன்னித்து, மறந்து, அ வ ைர மீண்டும் வீட்டுக்கு அழைத்து வர ஒப்புதல் அளிக்க வேண் டும் என்று கேட்டுக் கொண்டேன். இறுதியில் பாவேந்தர் என் கருத்துகளை ஏற்றுக் கொண்டவராய், முடிவாக நீ - என்னதான் செய்ய வேண்டும்’ என் கிருய் என்ருர், நான் மன்னர் மன்னனே வீட்டுக்கு அழைத்துவருகின்றேன், நீங்கள் ஒ ன் று ம் சொல்லாமல் அவரை ஏற்றுக் கொள்ள வேண்டும்' என்று கேட்டேன் "சரி, உன் விருப்பப்படி செய்” என்று கடைசியில் ஒப்புதல் அளித்தார்.' அதன் பின் மறுநாள் காலை 8 மணி அளவில் மன்னர் மன்னன் இருப்பிடத்திற்குச் சென்று, தந்தையார் அவர் வீட்டுக்கு வர ஒப்புதல் அளித்து விட்டார் என்றும் ,அவரும் அவர் துணைவியும் உடனே வீட்டுக்கு வரவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டேன். மன்னர் மன்னன் ஏறத்தாழ என்ன ஒத்த அகவையுடையவர் ஆகையால், அவரிடம் சற்று அதி காரத்துடனேயே பேசுவேன். அவரும் உரிமையுடன் அப் படியே என்னிடம் பேசுவார். நான் வீட்டிற்குப் புறப்பட வேண்டும் என்று சொன் னவுடன், அதெல்லாம் முடியாது. அவர் இப்படிச் செய்ய வேண்டும்; அப்படிச் செய்ய வேண்டும்” என்று சில கட்டுப் பாடுகளை அவர்மேல் சுமத்தினர். நான் 'அ'தெல்லாம் இப் பொழுது கேட்க வேன்டாம் பேசாமல் நீங்கள் வாருங்கள்; பின்னர் அவற்றைப் பற்றி நானே அவரிடம் பேசி, அவரை இணங்க வைக்கின்றேன்’ என்று அக்குடும்பத்தின் மேலுள்ள பற்றினல் இறைஞ்சிக் கூறினேன். அதற்கு அவர் ஒரேயடியாக, 'அதெல்லாம் முடியாது: அவர் நான் கேட்டுக் கொள்கிறபடி சில முறைப்பாடுகளைச் செய்தால்தான் வருவேன். இல்லையென்ருல் வர மாட்டேன், நான் யார் தெரியுமா பாவேந்தருக்கு மகன்! அவரைவிட