பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன்.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25. இப்ப, வேண்டாம் இட்டளி ! பாவேந்தர் ஒருமுறை அவர் மருமகளுர் திரு. தண்ட பாணியுடன் தொடர்வண்டியில் போய்க்கொண்டிருந்தா ராம். அப்பொழுது இரவு நேரம். அவர் எப்பொழுதும் குழந்தை போன்ற உணர்வினர். ஆகையால், வண்டி ஒரு நிலையத்தில் நின்றவுடன் தம் மரு கரை அழைத்து, "இங்கு எங்காவது சுடச்சுட இட்டளி கிடைக்கிறதா என்று பார்த்து வாங்கி வா' என்று கூறின ராம் மருகர், வெளியே எட்டிப்பார்த்து, எங்கும் ஒரே இருட்டாக இருப்பதை உணர்ந்து, இது ஒரு சிறிய நிலையம் போல் இருக்கிறது. இங்கெல்லாம் இட்டளி கிடைக்காது” என்று சொல்லியிருக்கிருர். உடனே பாவேந்தர், அட, இறங்கிப் போய்ப் பார்த்து விட்டு வா’ப்பா' என்ருராம். இவரும் இறங்கிப் போய்ப் பார்ப்பவர்போல், இங்கும் அங் கும் இரண்டு மூன்று முறை அலைந்திருக்கிருர். வண்டி அதற் குள் ஊதல் கொடுத்து விட்டுப் புறப்படப் போவதை உணர்ந்து கொண்ட பாவேந்தர் தலையைப் பலகணிக்கு வெளியே நீட்டித் தம் மருகரைக் கூவி அழைத்து, வா,வா, வண்டி புறப்பட்டு விட்டது: ஓடிவந்து ஏறிக்கொள்’ என்று கத்திஞராம். அவரும் ஓடிவந்து ஏறிக் கொண்டாராம். அதன்பின் வண்டி ஒரு பெரிய நிலையத்தில் நின்றவுடன்’ மருகர் பாவேந்தரின் பசியுணர்வையும் இட்டளி ஆசையும் திறைவு செய்யாத ஏக்கத்துடன், “இங்கே இட்டளி கிடைக் கலாம். போய்ப் பார்த்து வாங்கி வரட்டுமா' என்று கேட் டாராம். அதற்குப் பாவேந்தர் ஒரேயடியாக அதெல்லாம் ஒன்றும் வேண்டாம்; நீ பேசாமல் படு' என்று சொல்லி விட்டாராம். - - . பாவேந்தரின் இந்தக் குழந்தைமை உண்ர்வைப் பின், ஒெருகால் அவர் மருகர் என்னிடம் கூறிப் பெருமிதப் பட்டார். • . -