பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன்.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24. அந்த மீசை ஒருத்தன்தான்..! பாவேந்தர் 1960-ஆண்டளவில் திரைப்படம் பிடிக்கப் போவதாகச் சொல்லிக் கொண்டு சென்னைக்கு வந்தார். வந்தவர் சிலமாதங்களில் உடல் நலம் குன்றிப் படுத்த ^ படுக்கையாகக் கிடந்தார், அவருடைய இறுதி நாள்க ளாகவே அவை இருந்தன. . . . அவர் சென்னே வருதற்கு முன்பாகவே, அஃதாவது 1959-ஆம் ஆண்டின் இறுதியிலேயே நான் புதுச்சேரியை விட்டுக் கடலூருக்கு, அஞ்சலகப் பணித் தொடர்பாக மாறுத லாகிப் போய்விட்டேன், அதற்குப் பின்னர் பாவேந்தரை நான் சந்திக்கவே இல்லை. அவரின் குடும்பத் தொடர்பில் ஏற்பட்ட ஒரு மனக்கசப்பின் காரணமாக நான் அவரைச் சந்திக்காமலே போய்விட்டது. அவர் உடல் நலமற்றுப் படுக் கையில் கிடந்தபொழுது அவர் மகன் மன்னர் மன்னனிடம் நான் எங்கே உள்ளேன், எவ்வாறிருக்கின்றேன் என்றெல்லாம் சிலமுறை, கேட்ட தாகப் பின்னர், மன்னர் மன்னன் என்னிடம் சொன்னர். அக்கால், ஒருமுறை, பாவேந்தர் அவர் மகனிடம், எங்கே அந்த மீசை (மீசை என்பது என்னைத்தான், நான் மிகவும் பெரிய நீளமான மீசை வைத்துக் கொண்டிருப்பதால், அந்தப் - பெயரில் என்னை அழைத்திருக்கிரு.ர்.) அவன் நன்ருயிருக் கின்றன? அந்த மீசை ஒருவன்தான் எனக்குப் பின்னல் அதே உணர்வுடன் இருப்பான் என்று நம்பிக்கை இருக்கிறது. நான் அவனைப் பார்க்க விரும்புவதாகச் சொல்லி அழைத்து வா’ என்று கூறினதாக, அவர் மறைவுக்குப் பின்னல் ஒரு முறை மன்னர் மன்னன் என்னிடம் கூறினர். ஆனல், அந்தப் பெருமகனின் விழைவு என்னிடம் காலத்தால் தெரிவிக்கப் படாமற் போனதால், இறுதிவரை அவரைப் பார்க்க இய லாமலே போய்விட்டது. - . . . . - -