பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன்.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்புரை தமிழும் தமிழினமும் தமிழ்நாடும் நிலைகுலைந்து படிப்படியே தளர்வெய்தி வந்த இறங்கு நிலைப் போக்கைத் திருவள்ளுவப் பேராசான் தம் குறள் மறையில் இலை மறைகாயாக இங்கொன்றும் அங்கொன்றுமாகத் தமிழவர்க்குச் சுட்டிக்காட்டி,-வருமுன்னர்க் காத்துக் கொள்ளக் குறையிரந்து வேண்டிக்கொண்டும், வாகும் திறனியும் அற்ற நம்மோர் புறவஞ்சரும் உட்பகைவரும் விளேத்த கொடுங்கேட்டையே வளைய வளைய வந்து ஏற்று, எரி முன்னர்த் தீயென்னுமாருன விளைவையே தொடர்ந்து தாம் பெற்றுக் கொத்தடிமையராகிக் குலேந்துலேந்தனர்! ... . அத் தகா நலிவுநிலைமையை அடியசைக்கும் உர முயற்சியை முறையுற எவரும் மேற்கொள்ளாப் போதில், பதினெட்டு பத்தொன்பது நூற்ருண்டுக்கால நெட்ட நெடிய இடைவெளிக்குப் பின்னர், தந்தை பெரியாரின் தொடர்ந்த தமிழின மான மீட்புக் கடுந்தொண்டு, அரிய சில ஆற்றல் உள்ளங்களை ஊற்றங்கொள்ளச் செய் வித்தது. அத்தகைய திசைத் திருப்பம், புதுச்சேரியில் பிறந்த மதுகையராம் பாவேந்தர் உள்ளத்திலும் ஊடாடி ஊற்றெழுந்தது! 1926-இல் சிரி மயிலம் சுப்ரமணியர் துதியமுது' எழுதிய அச் சுப்புரத்தினத்தின் கைகள் 1928-இல் தந்தை பெரியார் அணியில் சேர்ந்த பின்னர், 'குடியரசு", "பகுத்தறிவு” ஏடுகளில் படையற்பணி செய்துவந்தன. தமிழையும் இனத்தையும் நாட்டையும் மீள்விக்கும் த கு தி சான்ற சாறவலிணர்வுகள் வாகெடுத்துப் பாத்திரளாய்ப் புறம்போந்தன. தமிழ மானிகள் பலரின் தெளிவுக்கான வலிவுகளை அவை உரு