பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- 5 -- வாக்கின இழந்தவற்றை மீட்கும் வல்லுணர்வு தமிழகத் தில் பரவி வடிவெழுந்தது! அவர் பாடிப்பாடிப் பாவேந்தராளுர் உள் ளொடுங்கி உட்கியிருந்த தமிழர் அவரின் பாக்களை ஒதி யோதி உணர்வேந்தி உரம்உட்கொண்டனர்! தமிழ் நிலம் எங்கணும் தமிழ்மானம் கனலேந்திக் கட்டுரங் காழ்த்தது! அத்தகு பெரும்பாவலரின் அரிய பேராற்றயுைம் உள்ளுணர்வுச் செழுமையையும் உள்ளீடாகவுணர்ந்தோர் ஒரு சிலரேயாயினர் அவருள்ளும் பாவலரேறு பெருஞ் சித்திரனரே தலைநின்ருர்: “புலமிக்கவரை புலமை தெரிதல் புலமிக்கவர்க்கே புலனும்: என்றபடி, பாவேந்தரின் பாத்திறமும் உள்ளுரமும், அவ்வகையில் உரத்தெழுந்து ஓங்கிய பாவலரேறு அவர்களுக்கே பலபடி மிக்கெழுந்து விளங்கித் தெரிந்தன! எனவே, எங்கும் எவரிடத்தும் எந்நிலையிலும் பாவேந்தரின் துரவல் பாய்ச்சிய ஒவத்து ஒளிகளைப் பிறங்கிடுமாறு வெளிக் காட்டும் பணியையும் தொடர்ந்து இவர் செய்து வந்தார்! பாவேந்தரைப் பற்றிப் பாவலரேறு அவர்கள் இது வரை எழுதியுள்ள குறிப்புகளைவிடப் பன்மடங்கு கருத்து விளக்கத் தெரிப்புகள்,அவர் ஏறிய தமிழ்மேடைகளிலும், கண்டுபேசவந்த தக்க உணர்வினர் பன்னூற்றுவர் முன்னும், அகத்திலும் புறத்திலும் அகலிதாகத் தெறித்தன! ஆனால், அவையும் வரிவடிவெடுத்து வாகை பெற்றிருப்பின், இந்நூல். ஒரு பேரளவான மடலமாய்த் தமிழ்க்கனம் தழைத்துக் கொழித்திருக்கும்! ஒரு வகையில், தமிழ்க்கும், பாவேந்தரைப் பற்றி விளக்கமுற உணர விழைவார்க்கும் ஒரு பெரும்பகுதி (அவை வெளி வர வாய்ப்பின்மை காரணமாக) இழப்பேயாகி விட்டது