உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

– 32 – "தமிழ், தமிழினம், தமிழிலக்கியம் இவற்றில் ஒன்றுபோம் எனில் மற்றவும் ஒழியும்! நாட்டின் உரிமை காத்தல் வேண்டும்”. -என்று தமிழர்க்கும் தமிழ்ப் புலவர்க்கும் இருக்க வேண் டிய பகையச்சத்தையும் கடமையையும்:எடுத்துக் கூறினர். பாவேந்தர் தம் இறுதி நாட்களில் உடல், மனம், செல்வம் முதலிய நலங்கள் குன்றி, மிகவும் சாம்பிப் போனர். தமிழர் உடலில் தமிழ்க் குருதி ஓடாமை கண் டு, உயிர் வெதும்பினர். தமிழர்க்குள் ஏற்பட்ட கட்சி, குல, கருத்துப் பூசல்களை எண்ணி எண்ணிச் சோர்வடைந்தார். இலக்கக் கணக்காகத் தொகுத்தபடி கட்சித் தலைமை தாங்குபவர் களும், பாவேந்தரின் செல்வங்குன்றிய நிலையைத் திரும்பிப் பார்க்கவும் இ ல் லே, அரசினரும் இப்பெரும் குமுகாயப் புலவர்க்கு ஒன்றும் உதவுமாறில்லை. தமிழ்க் கழகங்களும், அரசினர் சார்பில் அமைந்த தமிழ், இலக்கிய வ ள ர் ச் சி மன்றங்களும், நடுவணரசுக் கழகங்களும் இவரைக் கண்ணெ டுத்தும் பார்க்கவில்லை. இலக்கிய வளர்ச்சிக்கென உதவு கின்ற நூல்களாக வெறும் புனை கதைகளையும், குருட்டுச் சொல்லாடல்களையும், புனேசுருட்டுப் புளுகுகளையும் தேர்ந் தெடுத்து ஆயிரம் இரண்டாயிரம் எனப் பரிசுகளே அள்ளிக் கொடுத்தனரேயல்லால், இவரெழுதிய நூல்களில் சாகா இலக்கியங்களான குடும்ப விளக்கு, அழகின் சிரிப்பு, தமிழி யக்கம், இசையமுது முதலியவற்றில் ஒன்றுக்கேனும் ஒரு சிறு பரிசும் தரவில்லை. இவரின் குடும்ப விளக்கு உலகப் பொதுமை வாய்ந்த சிறப்பு நூல்! மக்கள் அமைப்புக்கெல் லாம் பொதுவான நடையுடை வினை முறைகளைத் தெளி வாக, இலக்கிய நயஞ்சொட்ட அருமையாக எடுத்துரைக் கின்றது. அவரெழுதிய நூல்களின் சிறப்புகளை எடுத்துக் கூறுவதெனின், அஃது ஒரு தனிப் பெரும் கட்டுரையாகவே விரியும்!