பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

— 33 — எழுதி எழுதிச் சோர்வடைந்தது அவர் கை: நினைத்து நினைத்துத் துயரடைந்தது அவர் உள்ளம். தமிழ்நாட்டின் நலனுக்கே வாழ்நாள் முழுதும் வீறு முழக்கிய அவர் வாய் அமைதி பூண்டது. அவ்வடங்கிய நிலையில் அவரைப் பயன் படுத்திப் பணம் பறிக்க முற்பட்டனர் திரைப்படப் பித்துடை யார் ஒரு சிலர். பொன் முட்டை இடும் இத் தமிழ்த்திற முடைய வாத்தின் வயிற்றுள் உள்ள அத்தனை முட்டைகளே யும் ஒரேயடியாக எடுத்துவிடத் துணிந்தனர் புல்லியர் சிலர். ஆகையால் புதுச்சேரியினின்று பாவேந்தர் சென்னைக்கு இழிந்தார். அவர் அறிவு குழப்பப் பெற்றது. இ. மு. த் த இழுப்புக்கெல்லாம் அவர் இணங்கினர். வேந்தர்க்கும் விழி தாழா இப் பாவேந்தரின் தலை, வீணரின் சிறு குரலுக்கும் விரலசைவுக்கும் தாழ்ந்து, தமிழ் மறம் குன்றியது. இவர் தம் உடலையும் உள்ளத்தையும் ஒருங்குறத் தாழ்த்திக் கொண் டார். அத்துடன் முன்பெல்லாம் ஒரு நாளேக்குப் பத்துப் பதினைந்து வெண்சுருட்டுகளைப் புகைத்து வந்த இவரின் வாய், ஒரு நாளேக்கு நூறு இருநூறெனப் புகைத்து இவரை நினை விழக்கச் செய்தது. இவரின் குடும்பம்வேறு கட்டுக் குலைந் தது. உறவினர் எனப்படுவோரெல்லாம் பாவலரின் சொத்து களுக்குப் பட்டியல் எடுத்தனர். கடன் ஏராளமாகக் குவிந் தது. மன அழற்சியாலும் போதிய கவனிப்பின்மையாலும் சென்னையில் தம் இறுதி நாட்களைத் துன்புடன் கழித்தார். இவரை வைத்துப் பாரதியாரின் வாழ்க்கை வரலாற்றைப் படமெடுப்பதாகப் பறை சாற்றினர் சில பேதைகள். இதுவே அவர் இறுதிக் கொள்கை என்று ஏமாற்றம் பேசினர் சிலர். தமிழ், தமிழர், தமிழ்நாடு என்று உடல், உணர்வு, உயிர் முங்குமாறு பேசியும் பாடியும் வந்த இப் புதுவைக் குயிலின். விடுதலை எழுச்சிப் பாவேந்தரின் - பெருமையுணராது பட முதலாளிகள் இவரின் உடலையும் உணர்வையும் சிறைப்படுத் தினர். தடுத்தாட்கொள்ள ஒருவரும் இல்லாக் காரணத் தால் பாவேந்தர் நெஞ்சு நோயால் மருத்துவமனையில் படுக்கையாகப் பலநாள் கிடந்தார். உயிர் வளியும் ஊட்டச் சாரமும் அவர்க்கு குழல்வழி ஊட்டப்பெற்றன. தமிழக