பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- 34 — அமைச்சர் சிலர் வந்துபார்த்தும், அரசினர் பேணிக் காக்க வேண்டிய அப்பெரும் பாவலரின் உடல் மருத்துவ மனையின் சிறப்புப் பகுதியில் பேணப் பெருது, பொதுப் பகுதியில் கவனிப்பாரற்றுக் கிடந்தது. இறுதியாக இந்நாட்டு மக்கட்கும் மொழிக்கும் ஒவ் வொரு நொடியும் அணுவும் தளராது உயிருழைப்புத் தந்த இப் பெரும்பாவலர், கோடி கோடியாய்ப் பொருள் தொகுத் துப் போலி நாகரிகப் புன்மை ஆரவாரங்களில் பாழடிக்கும் ஆயிரக்கணக்கானேர் கண்ணும் சிறக்கணியாது வாளா விருக்க, 21-4-1964 செவ்வாய்க்கிழமை காலையில் இத் தமிழகத்தையும் தமிழர்களையும் விட்டுப் பிரிந்து இயற்கை எய்தினர். தமிழைப் பேணிய இவர், தம்மைப் பேணிக் கொள்ள மறந்தார். இவர்தம் பாக்கள் தமிழர்க்குக் கேடயம்; தமிழர் எழுச்சித் தீயினுக்கு உணர்வு நெய்! இவராற்றிய தமிழ்த் தொண்டு அளவிடற்கரியது. இவர் தம் வரலாறு இருபதாம் நூற்ருண்டின் புரட்சிப்பணி! தமிழ் நாட்டின் விடுதலைப் பாவியம்! இவர் அமைத்த தமிழியக்கம். தமிழர் தம் உரிமை எழுச்சிக்குப் போர்ப் பாட்டு நாம் இங்கு இவர் பற்றிக் கூறியவை அவர் குடும்ப விளக்கில் ஒரு சிறு ஒளிக் கற்றை இவரின் பாண்டியன் பரிசில் ஒரு சிறு மணி! இவர்தம் அழகின் சிரிப்பில் ஒரு குறு நகை இவரின் தேனருவியில் ஒரு துளி. இவர்தம் இசையமுதில் ஒரு பண்! தமிழக வரலாற் றில் இதுவரை தோன்றிய விடுதலைப் பாவலர் இ வ. ர் ஒருவரே !