பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. தமிழியக்கம் தொடங்குக! (பாவேந்தர் நினைவிதழ்கள் வெளியிடுவதும், நினைவு விழாக்கள் கொண்டாடுவதும் வெற்று ஆரவார நிகழ்ச்சிகளே! தமிழியக்கத்தை உருவாக்கு வதற்கென்று அவர் செய்து தந்த சங்கையும், போர்ப்பறையையும் தமிழர் தம் கைகளில் எடுத்துப் போரொலி ஊதுதலும் அறைந்து முழங்குதலும் வேண்டும் என்ற அறிவுரையைச் சூடுபடப் புறப் படுத்தும் அரிய ஆசிரியவுரையிது!) தமிழாய்ந்த தமிழன் தான் தமிழ்நாட்டின் முதலமைச்சாய் வருதல் வேண்டும் ! தமிழ்ப் பகைவன் முதலமைச்சாய்த் தமிழ் நாட்டில் வாராது தடுத்தல் வேண்டும் ! -என்பது பாவேந்தர் பாரதிதாசனின் த மி ழி ய க்க முழக்கம்; இந்த நூற்ருண்டின் தொடக்கத்தில் எழுப்பிய புரட்சிக்குரல் இது. இன்று அக் குரலுக்குரியவர் நம்மிடை இலரெனினும், அக்குரல் இத் தமிழகத்தின் மூலே முடுக்கு களிலும், சந்தி சதுக்கங்களிலும் எதிரொலித்துக் கொண் டுள்ளது. ஆனால் இக் குரலின் கருத்து செயலாக்கப்பட்டதா? தமிழ் நாட்டில் உள்ள தமிழர்கள் இதுபற்றிக் கவலைப் பட்டனரா? இல்லை : அறவே இல்லை. ஏனெனில் இ ன் று தமிழர்களின் நெஞ்சங்கள் அடிமைப்பட்டுக்கிடக்கின்றன. அவர்தம் மூளைத்திரளேயுள் இருள் மண்டிக்கிடக்கின்றது : அவர்தம் முதுகெலும்பு கோணியுள்ளது ; அவரின் கைகள் கட்டப்பெற்றும், கால்கள் மண்டியிடப்பெற்றும் கிடக்கின்றன. இல்லையெனில் அவர்களில் சிலராகிலும் இதுபற்றிக் கவலைப் பட்டிருக்க வேண்டும்; சில ர.ா கி லும் எழுச்சியுற்றிருக்க வேண்டும் ஒரு சிலராவது இப்பாடல் வரிகளுக்குப் பொருள் எழுதியிருக்க வேண்டும். அந்நிலை எழாதவரை, பாரதிதாச லுக்கு நினைவிதழ்கள் வெளியிட்டுப் பயனில்லை; நினைவுவிழாக்