பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தரின் திருக்குறள் உரை! (செந்தமிழ் ஞா யி று பாவாணர் அவர்களின் 'திருக்குறள் தமிழ்மரபுரை வெளியீட்டு விழா' பறம்புக்குடியில் உ.த.க மாநாட்டில் நடைபெற்றது. அவ்விழாவில், (28 - 12 - 69). பாவேந்தர் திருக் குறளுக்கு உரை யெழுதியதும், அது அச்சாகையில் இடையில் நின்று போனதும் ஆகிய நிகழ்ச்சிகளை முன்வைத்து, சிறப்புற ஆசிரியர் விளக்கிய சொற் பொழிவின் ஒரு பகுதியிது! பாவேந்தர் பாரதிதாசனர், உங்களுக்குத் தெரிந்திருக் கும்;மிகவும் கண்டிப்பானவர்:அஃதாவது அவருடைய வீட்டில் அன்று; வெளியிலும் அன்று: தமிழ் என்ற நிலையிலே அவரை விடக் கண்டிப்பான புலவர் ஒருவரை-ஒர் உள்ளத்தை நான் பார்த்ததில்லை. அவரிடத்தில் ஆருண்டுகள் மிகவும் நெருங் கிப் பழகியவன் என்ற காரணத்தினலே ஒரு சில உண்மை யான செய்திகளை இங்கு நடைபெறுகின்ற இந்த விழாவை யொட்டி வெளிப்படுத்த விரும்புகின்றேன். இது எனக்கு மட்டுந்தான் தெரிந்த செய்தி. இன்னொருவர் தெரிந்திருப் பார்; அவர் இப்பொழுதுமிருக்கிருர். அவர் (பாவேந்தர்) திருக்குறளுக்கு ஒர் உரை எழுதினர். அந்த உரை பிற்காலத் திலே குயிலில் வெளியிடப்பெற்றது. அந்தத் திருக்குறளுரை அச்சானது; பதினைந்து படிவங்கள் அச்சாயின; ஒரு படிவம் என்பது பதினறு பக்கம்! இந்தப் பதினைந்து படிவங்கள் அச் சாகிக் கொண்டிருக்கின்ற பொழுது நான் புதுவையில் இருக் கின்றேன். உரை முழுவதும் எழுதி விட்டார்; உரை இருக் கிறது அப்படியே யாரும் அழித்துவிடவில்லை, வெளிவரும். அவரிடத்திலே நான் மிக நெருங்கிப் பேசியவன், பழகியவன்; கருத்துகளைப் பரிமாறிக் கொண்டவன்; அந்த உரை அச்சாகிக் கொண்டிருந்த தொடக்க நிலே யி லே ஒருநாள் மாலையிலே அச்சகத்திற்குப் போனேன். அச்சாகிக் கொண்டிருந்த அந்த ஒரு படிவத்தை எடுத் துப் படித்தேன். ஒரு திருக்குறளின் உரை என் கண்ணிலே பட்டது. உடனே