பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

— 52 -- அச்சகப் பொறுப்பாளராக அப்பொழுது இரு ந் த சாமி பழநியப்பன் என்கின்ற ஒருவர்-உங்களுக்குத் தெரிந்திருக்க லாம்; குன்றக்குடி அடிகளாரிடத்திலே செயலாளராக இருப் பவர்; இப்பொழுது இருக்கின்ருரோ என்னவோ, தெரிய வில்லை. அன்று அங்கு இருந்தார். அந்த உரையைப் படித்த வுடனே அந்தத் தாளை அப்படியே மேசை மேலே வைத்து விட்டேன்; வைத்துவிட்டு; ஒன்றும் புதியதாகக் காணுேமே; பழைய செய்திகளைத்தானே இவரும் திருப்பிச் சொல்லியிருக் கிருர்’ என்று சொன்னேன். இந்தக் கருத்தை வேறு யாரும் சொல்லிவிட்டு அங்கு இருந்துவிட முடியாது. உடனே சாமி பழநியப்பன் என்னங்க ஐயா, அப்படிச் சொல்லிவிட்டீர்கள்? எப்படி இருக்கிறது?’ என்று கேட்டார். “இல்லை; பொது வாகவே திருக்குறளுக்குப் பரிமேலழகர் உரைதான் சிறந்த உரை; அதற்கு விலக்கே கிடையாது. அவர் ஆரியச் சார் பான கருத்துகளைச் சிற்சில வாய்ப்பான இடங்களிலே வைத் துப் போய்விட்டார். மற்றபடி சிறந்த உரை அது. அந்தக் கருத்துகளை மட்டும் மறுக்க விரும்புகிறவர் 1330 குறள்களுக் கும் உரையெழுதிக் கொண்டிராமல், எந்தெந்த இடங்களிலே அவர் பரிமேலழகர் உரைக்கோ, அல்லது இதுவரை வந் த உரைகளுக்கோ மறுப்பாக உரை எழுத வேண்டுமோ, அல்லது எந்தெந்த இடங்களில் கருத்து மாறுபடுகின்றதோ அந்தந்த இடங்களை மட்டுமே விளக்கி, நூறு இடங்களானலும் சரி அவற்றிற்கு மட்டும் உரை யெழுதினால் போதும். இதற்காக முழுநூலுக்கும் உரையெழுதிக் கொண்டிருக்க வேண்டிய தில்லை; அதுவும் பாவேந்தர் பாரதிதாசனர் அந்த உரையை மிகவும் புதுமையாக எழுதிவிடவில்லை; ஒரளவு மெய்யறிவு உணர்வோடு சாங்கிய நூல்களின் எடுத்துக் காட்டோடு சில உரைகளை எழுதியிருக்கிரு.ர். இது தேவையில்லையே!” என்று சொன்னேன். சொல்லிவிட்டுப் போய்விட்டேன்; o ட்ட பின்னலே, சாமிபழநியப்பன் பாவேந்தரிடத் தச் செய்தியைப் போய்ச் சொல்லியிருக்கிரு.ர். க்கம்.அங்கு வந்தார்; இந்த உரையை எடுத்துப் இ. சொல்லிவிட்டுப் போனர்: எ ன் று