பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. நாட்டுக்கு நன்மை! (பாவேந்தரின் கூற்ருென்றைச் சுட்டி, சிறுவர்க் குச் செப்பத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். ஒர் அரிய பகுதியிது!) (தமிழ்ச்சிட்டில் வெளியானது. குரல்- 1. இசை-7.) "இளமை அறிவோடு இயைந்தால், நாட்டுக்கு விளைவ தெல்லாம் நன்மையே என்று பாவேந்தர் பாரதிதாசன் கூறு கின்ருர். சிறுவர்களாக இருக்கின்ற பொழுது நாம் அடை கின்ற செப்பத்தைப் பொறுத்தே பிற்காலத்து நம் வாழ்க்கை அமைகின்றது. நம்மைப் பொறுத்தே நம் நாடு அமைகின்றது. நாம் செப்பமில்லாதவர்களாக இருந்தால் நாடும் செப்பமாக இராது; வீடும் விளக்கமுற இருக்காது.