பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தரும் பாரதியாரும் (பாவேந்தரைவிட, பாரதியார் பலபடியாகப் பாராட்டிப் போற்றித் துரக்கிக் காட்டப் பெறுகின் றமை, யாரால் எக் காரணங்களினல் என்பதைச் கட்டி, அவற்றின் பின்புலத்தையும் காட்டுகின்ருர் ஆசிரியர்! இப்பகுதி, ஆரியப் பார்ப்பனரின் அளவி றந்த கொட்டங்கள்” என்னும் நூலில் ஓர் உள் ளடக்கம்) பாரதியாரிடம் கற்பனையாற்றலும் அதை வெளிப் படுத்தும் உணர்ச்சியும் ஓரளவு இருந்தன என்று சொல்ல லாமே தவிர, மொழிப்பயிற்சியும், சொல்லாற்றலும், இலக்கிய பயிற்சியும் அவ்வளவு மிகுந்திருந்தனவாகச் சொல்லமுடியாது. உலகியலறிவும், ம்ெய்யுணர்ச்யும் அவ்வளவு சிறப்புற விளங்கி பிருந்தன என்றும் பாராட்டப் பெறுவதன் நோக்கமெல்லாம், அவர் ஒரு பார்ப்பனர் என்பதைத் தவிர வேறு இருக்க முடியாது. பாட்டுத்திறத்தில் பாரதிதாசன் இவரைப் பல வகையிலும் வென்றிருக்கின்ருர், ஆனால் இவர் ஒரு தமிழர் அதுவும் தன்மான எழுச்சியுள்ள தனித்தமிழர் என்பதற் காகவே ஆரியப்பார்ப்பனராலும், நம் வீடணத் தமிழர்க ளாலும் அழுத்திவைக்கப் பெற்றுள்ளார். -