பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. பாவேந்தரிடம் முதல் சந்திப்பு (1950-இல் ஆசிரியரின் கல்லுரிப் படிப்புத் தொடக்கத் தில், அவர்தம் பதின்ைகாவது அகவையிலேயே எழுதியிருந்த 'மல்லிகை கொய்யாக்கனி' என்ற இரண்டு பாவியங்களே யும் எடுத்துக் கொண்டு சேலத்திவிருந்து புதுச்சேரிக்குப் பாவேந்தர் பாரதிதாசனை முதன் முறையாகப் பார்க்கச் சென்ற பொழுது பாவேந்தர், மல்லிகை"யின் முதல் பாடலாகிய, வான்சிரித்து வண்ணவொளி வீசிற்றங்கே, வயல்நோக்கிப் போந்தனர் தென் உழவரெல்லாம் ; கான்யாற்றின் சரையினில் நல் வஞ்சியர்கள் கமழ்கின்ற சந்தனத்தை யள்ளித் தம்மென் மேனிகளில் பூசுகின்ருர்; பரிதி அந்த * மெல்லனைய ஒண்டொடியர் மீதில் செம்பொன் போன்ருெளியைப் பூசுகின்ருன்! தமிழப்பெண்டிர் புரள்கின்ற நீள்குழலால் வணக்கம் செய்வார்!’ என்னும் பாடலைப் படித்து விட்டுக், "கான்யாறு என்ருல் காட்டாறு. அங்குக் குளிப்பவர்களுக்குச் சந்தனம் எங்கிருந்து வந்தது? சேறு தான் கிடைக்கும், அள்ளிப் பூசிக் கொள்ள' என்று குறைகூறிப் பாவியத்தை மேலும் பார்க்க மறுத்துத் திருப்பிக் கொடுத்துப் பாட்டு எல்லாருக்கும் எழுத வராது: ஒரு சிலர்க்கே வரும். பாட்டுப் படிக்க வேண்டியவர்க ளெல்லாம் பாட்டு எழுதக் கூடாது. நீ போய் இன்னும் படி: என்று கூறிப் போகச் சொன்னர். பின் எத்தனை முறை வேண்டியும், அவர் நூல்களைப் பார்க்க மறுத்து விட்டதால், ஆசிரியர் அங்குள்ள கடற்கரைக்குச் சென்று அமர்ந்து மிகவும் வருத்தத்துடன் எழுதிய பாடலிது.) --