பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. பாரதிதாசன் காதலி (தமிழை மணந்த பாவேந்தர் பாரதிதாசனிடம் ஒரு பெண் காதல் கொண்டாள். அத் தமிழ் என்னும் பெண்ணைத் தவிர வேருெருத்தியைத் தி ரு ம் பி ப் பாரேன் என்று மறுத்தான் அப் புலவன். வாழ்க’ எனக் கூறி வழி நடந்தாள் அவள். பாவேந்தர் பாரதிதாசனின் முன்னிலையில் 'பாரதிதாசன் எண் சுவை” என்னும் தலைப்பில் நடந்த பாட்டரங்கத்தில் 'இளரிவரல் பற்றி எழுதிப் பாடியது இது.) கொழித்த செந்தமிழ்க் கோமகளின் குறள்மணக் கும்வாய்ப் பேச்சினுக்கும் செழித்த சிலம்புசிந் தாமணிக்கும், செறிவளை, குண்டல, மேகலைக்கும் கழித்தான் பொழுதை அவனிடத்திற் காதலைச் சொன்னேன்; கன்னியெனைப் பழித்தான், இழித்தான் தோழியவன் பாரதி தாசனெ னும்பெயரோன்! ஊற்றுப் பெருக்கெனப் பாவியற்றி உலகோர்க் கீந்தான்; துன்புறுவார்க் காற்றுப் பெருக்கென உதவியவன் ; அவன்தோள் விரும்பி மணந்தென்னை ஏற்றுக் கொள்வீ ரென்றேன, இளையாள் என்றன் உளம் நோகத் துாற்றிப் பழித்தான் ; தோழியவன் தோன்றல் பாரதி தாசனென்பான்! செந்தமிழ்க் கன்னியெ னுமொருத்தி சேல்விழிக் கும்.அவள் பால்மொழிக்கும் தந்தவன் உளத்தை என்பார்சொல் தவிர்த்தே தோழி அவனிடத்தில் சிந்தும் புன்னகை மொழிகூறிச் சேயிழை யென்னைக் கொள்கென்றேன்; நொந்தழி வுறுமா றென யிழித்தான் ; நோய்செய் தானென் உயிர் கொய்தான்!