பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன் அறுசுவை விருந்து.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 ‘மாமிச உணவு', 'புலால் உணவு' என்று கூறுவர் வேறு சிலர். கவிஞர் வேறு விதமாகக் கூறுவார். கவிஞர் முதல் தடவையாக ஒரு அன்பருடைய வீட்டுக் குச் சென்ருர், உணவு தயாரிப்பதற்காக, 'ஐயா, நீங்கள் சைவமா?' என்று கேட்டார். அந்த வீட்டு அம்மையார். இல்ல, நான் வைணவம்' என்று கூறினர் கவிஞா. : அம்மையாருக்குப் புரியவில்லை. வியப்படைந்தார். சைவ த்துக்கு எதிரிடை வைணவம் தானே மாமிக உணவைக் குறிப்பிட கவிஞர் அம்மாதிரி நகைச்சுவையோடு கூறுவார். 18 - பொறுக்கி எடுத்த மாணிக்கங்கள் சில ஆண்டுகளுக்கு முன், புதுச்சேரியில் ஒரு நிகழ்ச்சி யில் பாவேந்தர் கலந்து கொண்டார். அதில், உள்ளூர் அமைச்சர் ஒருவரும் கலந்து கொண்டார். பாவேந்தர் தம் பேச்சின் மத்தியில், “இங்குள்ள அமைச்சர்கள் பொறுக்கி......' என்று கூறி விட்டு மேசை மீது இருந்த சோடாவை எடுத்துக் குடிக்கத் தொடங் கினர். S S S S S SS00S S S 0S S S S S S S SSSLS -w. அப்பொழுது அமைச்சர் சங்கடத்தோடு நெளிய, கூட்டத்தில் அமைச்சர் சார்பானவர்கள் சலசலக்க, பாவேந்தர் சோடாவைக்குடித்துவிட்டு, "எடுத்த மாணிக் கங்கள்” என்று வார்த்தையை முடித்தார். -