பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன் அறுசுவை விருந்து.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 பார்ப்பதால் வாங்கலாம் ஒரு கடைக்குள் வாடிக்கையாளர் நுழையும் போதே, என்ன வேண்டும்? என்ன வேண்டும்?' என்று கேட்டு, சில கடைக்காரர்கள் வழி மறிப்பார்கள். கவிஞரும் நானும் கடைவீதியில் போய்க் கொண்டிருந் தோம். அப்பொழுது ஒரு ஜவுளிக்கடைக்குள் கவிஞர் நுழைந்தார். கடை விற்பனையாளர் எதிர்ப்பட்டு, ‘என்ன வேண்டும்?' என்று கேட்டார். வேண்டும் என்று வரவில்லை; பார்ப்பதல்ை ஒரு பொருளே வாங்கலாம் அல்லவா?' என்று கூறிவிட்டு கவிஞர் திரும்பிவிட்டார். . - அதைக் கேட்ட விற்பனையாளர் திரு திரு வென்று விழித்தார். அவருக்கு எப்படித் தெரியும் கவிஞரின் கருத்து - 43 தம்பி எங்கே ? கவிஞர் வீட்டில், கவிஞரின் மூத்த மகள் சரசுவதிதான் பெரும்பாலும் குடும்பத்தைக் கவனித்து வந்தார். சரசுவதிக்குத் திருமணம் ஆகி கணவன் வீட்டுக்குச் சென்ற பின்னர், மன்னர் மன்னன்தான் குடும்பத்தைப் பொறுப்பாகக் கவனித்து வந்தார். கவிஞருக்கு குடும்பத்தின் கவலையோ, பொறுப்போ எதுவுமே கிடையாது.