பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன் அறுசுவை விருந்து.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 இனிமேல் இப்படிப் பாட வேண்டாம் திருக்குறளுக்கு இசை அமைத்து, இசையோடு பாடி வந்தார் ஒரு பாடகர். அவருக்கு புதுச்சேரி முத்தமிழ் மன்றத்தில் கவிஞர் தலைமையில் பாராட்டு நடைபெற்றது. "திருக்குறளே இசையோடு பாடிப் பரப்புவது நல்ல தொண்டு' என பலர் பாராட்டினர்கள். ஒவ்வொரு குமளேயும் ஒவ்வொரு இசையில் பாடி கூட்டத்தினரை மகிழ்வித்தார் பாடகர். கூட்டமோ இசையில் மெய்மறந்திருந்தது. - . திடீரென கவிஞர் எழுந்து பாடகரை நோக்கி, "நிறுத்து; நீ இனிமேல் பாட வேண்டாம்; குறளில் உள்ள சொற்களே இசைக்காக சிதைத்தும் பிரித்தும் திரித்தும் பாடுவாய் என்று எனக்கு முன்பே தெரியாமல் போய் விட்டது. இனி இந்த வேலையை விட்டுவிடு' என்று கண்டிக்கத் தொடங்கினர். கூட்டத்தில் திகைப்பு உண்டாயிற்று. பாடகரோ மேடையை விட்டு கீழே இறங்கிப் புறப்பட்டு விட்டார். 'போகட்டும்; போகட்டும்; தமிழைக் கெடுக்கும் இத்தகையோர் முயற்சிக்கு துணைபுரியவே கூடாது" என்று முழங்கினர் கவிஞர். 53 'பிரியாணி வாங்கி வா’’ ஒரு சமயம், மதுரையிலிருந்து கவிஞர் சென்னைக்கு ரயிலில் பிரயாணம் செய்தார். அவருடன் இளைஞர் ஒருவரும் இருந்தார். ரயில் திருச்சி வந்தது. பிளாட்