பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன் அறுசுவை விருந்து.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 நூல்களைச் சுமந்து சென்று வீடு வீடாகக் கொண்டு சென்று விற்ருர்கள். வங்கத்து மக்கள் அனைவரும் தாகூரைப் போற்றினர்கள். இல்லந்தோறும் அவரது பாடல் பாடப் பட்டது. அதுபோன்று நமது குடும்பங்களிலும் பாரதி தாசனின் பாடல் பாடப்பட வேண்டும். புதிய இந்த மனப் பான்மை அமைய வேண்டும்.விளையவேண்டும். 2 பாவேந்தர் கண்ட இயற்கை . சிலம்பொலி சு. செல்லப்பளுர் உரைச் சுருக்கம் "தமிழால் பாரதி தகுதி பெற்றதும் பாரதியால் தமிழ் தகுதி பெற்றதும்' என்று பாவேந்தர் குறிப்பிட்டிருக் கிருர், அதைப்போலவே பாவேந்தரால் இயற்கை பெருமை பெற்றதும் இயற்கையால் பாவேந்தர் பெருமை பெற்றதும் என்று குறிப்பிடலாம். R - இயற்கைக் காட்சிகளை மிக எளிமையாக சங்கப் புலவர்கள் போலச் சொல்லுவதில் அவர் வல்லவர். ' குயில் கூவிக் கொண்டிருக்கும் கோலம் மிகுந்த மயில் ஆடிக் கொண்டிருக்கும்.................. ...............சஞ்சீவி பருவதத்தின் சாரல்" என்று இயற்கையை இயற்கையாகவே எடுத்துச் சொல்லி யிருக்கிரு.ர். காட்டைப் பற்றி அவர் பாடிய செய்யுளில் காட்டின் கொடுமையை நமக்கு நன்கு எடுத்துக் காட்டுகிரு.ர். " முட்புதர்கள் மொய்த்த தரை எங்கும், இயற்கையிலே தோய்ந்தவர் பாரதிதாசன்.