பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன் அறுசுவை விருந்து.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

71 நாடு விடுதலே பெறப் பாடினர் பாரதி மொழி விடுதலை பெறப் பாடினர் பாரதிதாசன்! "சாதிகள் இல்லையடி பாப்பா என்ருர் பாரதி அவரை விட ஒரு படி மேலே சென்று, 'இருட்டறையில் உள்ள தடா உலகம்-சாதி இருக்கின்ற தென்பானும் இருக்கின்ருனே' என்ருர் பாரதிதாசன், 7 எல்லோருக்கும் கல்வி முன்னுள் துணைவேந்தர் சுந்தர வடிவேலு உரைச் சுருக்கம் மனிதன் உண்மை பேச வேண்டும்; உண்மையை எழுத வேண்டும். அதற்குத்தான் என்றும் பெருமை கிடைக்கும். உண்மையை எழுதிப் பெருமை பெற்றவர் பாரதிதாசன். சமுதாய அறியாமையை-கோளாறுகளை நீக்கக் குரல் கொடுத்தார் பாரதிதாசன். மலைகளை அல்ல-கடல்களே அல்ல-மக்களைக் கொண்டது நாடு ஒரு காட்டுக்கு எத்தனை சிறப்பிருங் தாலும் நூற்றுக்கு முப்பது பேர்தான் அ த காட்டில் படித்தவர்கள் என்ருல் இதிலே பெருமை கிடையாது. இந்த இழிகிலேயைக் கண்ட பாரதிதாசன் வருந்தினர். எங்களைப் போன்ற படித்தவர்கள்-படிக்காதவர் களுக்குக் கல்வி வழங்காமல் இருக்கும் கிலேயைக் கண்டு கொதிப்படைந்தார்.