பக்கம்:பிடியும் களிறும் -சங்கநூற் காட்சிகள்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

vii

கிருன். திரு மனம் நன் ருக நடக்கும் என்பதற்கு என்ன தடை?

இந்தப் பாடல்களின் விளக்கங்கள் பெரும்பாலும் நச்சி ஞர்க்கினியர் உரையைத் தழுவியே அமைந்திருக்கின்றன. அப்பெரும் புலவருடைய உரையைப் படிக்கும்போது, “எத்தனை விரிந்த அறிவு!’ என்ற வியப்பே எழுகிறது. சில இடங்களில் நச்சிஞர்க்கினியர் உரைக்கு வேறு பட்ட விளக்கத்தை இந்தப் புத்தகத்தில் காணலாம்.

இதற்கு முன் வெளியான மனைவிளக்கு, குறிஞ்சித் தேன், தாமரைப் பொய்கை என்ற மூன்று நூல்களையும் தமிழன் பர்கள் சுவைத்துப் பாராட்டி ஊக்கம் அளித்து வருகிரும் கள். இது நான்காவது புத்தகம். இனியும் எஞ்சியுள்ள நான்கு தொகை நூல்களிலிருந்து எடுத்த செய்யுட்களுக்கு விளக்கம் எழுதி நான்கு புத்தகங்களாக வெளியிட எண்ணியிருக்கிறேன். முருகன் திருவருள் இந்த முயற்சியை நிறைவேறச் செய்யும் என்று நம்புகிறேன்.

25–4–52 கி. வா. ஜகந்நாதன்.

குறிப்பு

-இந்த இரண்டாம் பதிப்பில் ‘கருங்கூத்து’ என்ற தலைப்பில், வேறு ஒரு பாடலுக்குரிய விளக்கத்தையும் சேர்த்திருக்கிறேன். குறிஞ்சிப் பகுதியில் வரும் பாடல் * {g}giکی

25-12-59 கி. வா. ஜ.