பக்கம்:பிடியும் களிறும் -சங்கநூற் காட்சிகள்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமண முயற்சி ġġ

பூவைப் போன்ற நின் அழகுடைய மையுண்ட கண்கள் விளக்கத்தை அடைவனவாகுக!

நெறி அறி. செறிகுறி புரிதிரிபு அறியா

அறிவனை முந்துlஇத் தகைமிகு தொகைவகை அறியும்

சான்றவர் இனமாக - வேய்புரை மென்ருேட் பசலையும் அம்பலும் மாயப் புணர்ச்சியும் எல்லாம் உடன்நீங்கச் சேய்உயர் வெற்பனும் வந்தனன் பூஎழில் உண்கணும் பொலிகமா இனியே! நல்ல நூல்களின் வழியாலே அறிந்த, மணமக்கள் பொருந்துவதற்கு ஏற்ற முகூர்த்தம் தவறுவதே அறியாத சோதிடனை முன்னிட்டுக் கொண்டு, தகுதிமிக்க, தொகுத்த லும் வகுத்தலும் அறியும் சான்றவர் தனக்கு உடன்வரும் உறவினராக இருப்ப, மூங்கிலேப் போன்ற உன்னுடைய மெல்லிய தோளில் உண்டாகும் பசலையும், ஊரினர் கூறும் பழிமொழியும், நிலையாமையையுடைய களவுப் புணர்ச்சியு மாகிய எல்லாம் ஒருங்கே நீங்கும்படியாக, நெடுந்துாரம் உயர்ந்த மலையையுடைய தலைவனும் நின்னை வரைந்து கொள்ளும் பொருட்டு வந்துவிட்டான். ஆதலின் பூவின் அழகையுடைய நின் மையுண்ட கண்களும் இனி விளக்கம் பெறுவனவாகுக.

நெறி-நூலின் வழி. செறி-இணைவதற்கு ஏற்ற. குறிநல்லநேரம். புரி திரிபு அறியா-செய்யும் தவற்றை அறி யாத, தவருத என்றபடி. அறிவன்-சோதிடன். முந்து உlஇ-முன்னேவிட்டு; முன்னிட்டுக்கொண்டு. தகைதகுதி, அழகு என்றும் கொள்ளலாம். தொகை-சுருக்குதல் வகை-பிரித்துச் சொல்லுதல். வேய்-மூங்கிலை. புரைஒக்கும். பசலை-மகளிருக்குப் பிரிவால் வரும் ஒருவகை நிறம்: இது பொன்னைப் போல மஞ்சள் நிறமுடையது; தேமலைப் போல வருவது. அம்பல்-ஊரினர் மறைவாகத் தமக்குள்ளே தலைவியைப் பற்றிப் பேசிக்கொள்ளும்