பக்கம்:பிடியும் களிறும் -சங்கநூற் காட்சிகள்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 பிடியும் களிறும்

சொல்வதாக இருந்தால் எதைச் சுருக்கமாகத் தொகுத்துச் சொல்ல வேண்டுமென்பதும், எதை விளக்கமாக வகுத்துக்கூற வேண்டுமென்பதும் அவர் களுக்கு நன்ருகத் தெரியும். தகை மிக்க வரும் தொகையும் வகையும் அறிபவருமாகிய சான்றவரையே இனமாகக் கொண்டு தலைவர் வந்தார். இனிமேல் நமக்கு ஒரு குறையும் இல்லை. த்லைவி இதுவரையில் களவுக் காதலில் அவரை நெடும் பொழுது பிரிந்து வருந்தியிருந்தேனே! அதை நினைக் கையில் என் உள்ளம் கலங்குகிறது.

தோழி : நீ அந்தக் கலக்கத்தை விட்டுவிடு. இனி அவர் உன்னைப் பிரியமாட்டார். அவர் பிரிவதால் உன் பால் வந்து படர்ந்த பிறர் பழிகறும்படி செய்த பசலையும் இனி நின்னை அணுகாது. மூங்கிலைப் போன்ற உன் மெல்லிய தோளிலே படர்ந்த பசலை நோய் புறத் தாருக்கு உன் காம நோயைப் புலப்படுத்திக்கொண்டு நின்றதே! இனி அந்த மென்ருேட் பசலை நீங்கிவிடும். அந்தப் பசலையைக் கண்டு ஊரினர் தமக்குள்ளே கசமுசவென்று பேசிய வம்புச் சொற்களுக்கும் இனி இடம் இல்லை; அவையும் விடைபெற்றுக் கொள்ளும், இவை யாவற்றிற்கும் காரணமாகிய களவுக் காதலும் இனி நீங்கிவிடும். அவர் வருவாரோ வரமாட்டாரோ என்று பேதுறும்படி ஒருநிலை இல்லாமல் இருந்தது, அந்தக் காதல். நிலையில்லாத அந்த மாயப்புணர்ச்சியே இல்லையாகிவிடும். இவ்வாறு உன் வருத்தத்துக்குக் காரணமான பசலையும், ஊரினர் கூறும் அம்பலும் (வம்புப் பேச்சு), இவற்றிற்கு காரணமான மாயப் புணர்ச்சியும் ஒரேயடியாக ஒழியும்படியாகச் சேய் உயர் (நெடுக உயர்ந்த) வெற்பர் வந்தார். இனிமேல் நீ மனம் கலங்கிக் கண்ணிர் சிந்தி வருந்த வேண்டாம். உன் உள்ளத்தில் உவகை மிகுதியாகட்டும். அந்த உவகை உன் கண்களிலே ஒளிவிடும். தாமரைப்