பக்கம்:பிடியும் களிறும் -சங்கநூற் காட்சிகள்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருங்கூத்து 107

தின்-பக்கத்திலிருந்தும். தையால்-தையலே தம்பலம். தாம்பூலம், தின்றியோ-தின்கிருயா? பக்கு- ைப. அழித்து அவிழ்த்து. கொண்டி-கொள்வாயாக.)

தலைவி. நீ என்ன செய்தாய்? அதைவாங்கிக்கொண்டாயா?

தோழி: சே! நான் ஒன்றும் வாயைத் திறந்து பேசவில்லை;

சும்மா அப்படியே நின்றேன். - தtல்வி: அப்புறம்?

தோழி: அசையாமல் நின்ற என்னை அவன் பெண் பிசாசு என்று எண்ணி விட்டான் போல் தோன் றியது திடீரென்று சிறிது தூரம் விலகி நின்முன். அவன் பேச்சும் செயலும் இப்போது மாறிவிட்டன. பெரிய தைரியசாலியைப் போல் பேசத் தொடங் கின்ை. பாவம் உள்ளுக்குள்ளே அவன் நடுங்குவது எனக்குத் தெரியாமலா போகும்? தலைவி. அவன் என்ன சொன்னன்? தோழி: 'இந்தா, ஏ. சிறிய பெண்ணே, நீ என் கையில் வசமாக இப்போது சிக்கிக்கொண்டாய், நானும் உன்னைப் போலவும் மற்றப் பிசாசுகளைப் போலவும் ஒர் பிசாசுதான். ஆமாம். இதைத் தெரிந்து கொள். என்னை ஏதாவது தொந்தரவு செய்தாய், உன்னைச் சும்மா விடமாட்டேன்; இந்த ஊரில் உனக்கு ஒரு பருக்கை பலிகூடக் கிடைக்காமல் செய்து விடுவேன்; எல்லாவற்றையும் நானே வாங்கிக் கொள்வேன்; தெரிந்ததா?’ என்ருன். இன்னும் என்ன என்னவோ பேசினன். அச்சம் தாங்காமல் அவன் வாய் புலம்பிக் கொண்டே இருந்தது. தலைவி; நீ ஒன்றும் அவனிடம் பேசவில்லையா? தோழி: அவன் படபடவென்று பேசுகிறதைக் கேட்டு அவனுடைய நெஞ்சு படபடப்பதை நான் உணர்ந்து கொண்டேன் ஒன்றும் பேசவில்லை. ஆனல்